»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மாஜி நடிகர் மற்றும் மாஜி இயக்குனரான பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை கதாநாயகியாக களமிறக்குகிறார்

நடிகர் வரிசையில் பாக்யராஜுக்கு சினிமா வரலாற்றில் பெயர் இருக்குமோ என்னமோ, ஆனால் இயக்குநராகஅவரது இடத்தை யாரும் மறுக்க முடியாது.

ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு தனிபாணியை உருவாக்கி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

ஆனால், டபுள் மீனிங் என்ற அசிங்கத்தை தமிழ் சினிமாவில் உரம் போட்டு வளர்த்தவர்களில் முக்கியமானவர்இவரே.

சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த இவருக்கு சில காலத்துக்கு முன் சரிவு ஏற்பட்டது. எடுத்த படங்கள்எல்லாமே வரிசையாகத் தோல்வியடைந்தன.

கடைசியாக அவர் கொடுத்த சாதாரண ஹிட் படம் ஒரு ஊர்ல ஒருராஜகுமாரி.

கதாநாயகனாக தன்னை இனி ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு,விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற படத்தை இயக்கினார்.

படம் மாபெரும் தோல்வி அடைந்தது. மாபெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட விஜய்காந்தின் மார்க்கெட்டையேசரியச் செய்து சாதனை படைத்தார் பாக்யராஜ். இந்தப் படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தால் அதன்தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலையே செய்து கொண்டார்.

இவ்வாறு மகா ராசிக்காரராக விளங்கும் பாக்யராஜ், இப்போது டிவி சீரியல்களை இயக்கி வருகிறார். ஆனாலும்இப்போது அவருக்கு பெரும் பணக் கஷ்டமாம். இதனால் 40 ஏக்கர் நிலத்தைக் கூட சமீபத்தில் விற்றுள்ளார்.

இந் நிலையில் தனது மகள் சரண்யாவை திடீரென்று கதாநாயகியாக்கி பாரிஜாதம் என்ற படத்தைதொடங்கியுள்ளார். சரண்யா வைஷ்ணவா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ளார். பாலேநடனம் கற்றுக்கொள்ளும் போது திரிஷா இவரது கிளாஸ்மேட்.

சரண்யாவின் நச்சரிப்பால் தான் இந்தப் படத்தை பாக்யராஜ் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. கதாநாயகிக்குமுக்கியவத்துவம் கொடுத்து பாரிஜாதம் கதையை தயார் செய்துள்ளாராம்.

சரண்யாவின் அம்மாவான பூர்ணிமாவும் நடிகையாக இருந்தவர் என்பது இளம் தலைமுறையினருக்குதெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசாக அறிவிக்கப்படும் அளவுக்குதீவிரமான அதிமுக அனுதாபியாக இருந்தார் பாக்யராஜ். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் தனிக் கட்சி நடத்திதொண்டர்களே கிடைக்காததால் அதை மூடிவிட்டார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil