»   »  டைட்டிலுக்கு ஆப்பு-சரத் டென்ஷன்!

டைட்டிலுக்கு ஆப்பு-சரத் டென்ஷன்!

Subscribe to Oneindia Tamil

சரத்குமார் நடிக்கவுள்ள அழகிரி என்ற புதிய படத்தின் டைட்டிலை பதிவு செய்ய மறுத்து, அதை மாற்றுமாறு திரைப்பட வர்த்தக சபையும், தயாரிப்பாளர்கள் சங்கமும் கூறியுள்ளதால் சரத் கடுப்பாகியுள்ளார்.

போக்கிரி படத்தைத் தயாரித்த கனகரத்னா மூவிஸ் நிறுவனம் சரத்குமாரை வைத்து புதிதாக ஒரு படம் தயாரிக்கவுள்ளது. மலையாளத்தில் திலீப் நடித்த லயன் என்ற படத்தின் ரீமேக் இது.

இப்படத்துக்கு முதலில் சிங்கம்ல என்று பெயர் வைத்திருந்தனர். தற்போது இதை மாற்றி அழகிரி என பெயர் சூட்டியுள்ளனர். இப்பெயரை பதிவு செய்ய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை தயாரிப்பாளர் அணுகியபோது, அழகிரி என்ற பெயரை பதிவு செய்ய முடியாது என மறுத்து விட்டார்களாம்.

வேறு பெயரைச் சொல்லுங்கள் பதிவு செய்கிறோம் என இரு தரப்பும் கூறி விட்டதால் கடுப்பாகியுள்ளார் சரத்குமார்.

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பெயரைக் குறிப்பது போல உள்ளால் திரைப்பட வர்த்தக சபையும், தயாரிப்பாளர் சங்கமும் அழகிரி என்ற பெயரை பதிவு செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சரத்குமார் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி விட்டார். விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே அழகிரி என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே சரத்குமார் திமுகவில் இருந்திருந்தால் இந்தப் பஞ்சாயத்தே வந்திருக்காது. அழகிரியே கூட படத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஷூட்டிங்கைத் தொடங்கி வைத்திருப்பார்.

அழகிரி என்ற பெயரை பதிவு செய்ய ஆட்சபனை கிளம்பியிருப்பதால் இதை ஒரு கை பார்த்து விடுவது என்று சரத் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அடங்கொப்புரானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil