»   »  சரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு! - #20YearsOfSuriyaism

சரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு! - #20YearsOfSuriyaism

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் சூர்யாவுக்கு சினிமா உலகில் இன்று 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நடிகர் சிவகுமாரின் மகனாகத் திரையுலகிற்கு அறிமுகமானாலும், தனது திறமையால் இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் சூர்யா.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அது முடிந்தவுடன் டீஸர், ட்ரெய்லர் தேதிகள் பற்றி அறிவிக்கப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

முதல் படம் :

முதல் படம் :

சரவணன் நடிகர் சூர்யாவாகி திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. அவரின் முதல் படமான 'நேருக்கு நேர்' செப்டம்பர் 6, 1997-ல் வெளியானது.

மாறுபட்ட வேடங்கள் :

மாறுபட்ட வேடங்கள் :

'நந்தா', 'பிதாமகன்', 'பேரழகன்', 'கஜினி', 'மாற்றான்' உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தான் ஒரு வெர்சட்டைல் நடிகர் என நிரூபித்திருக்கிறார் சூர்யா.

சமூகப் பணிகள் :

சமூகப் பணிகள் :

சூர்யா குடும்பத்தினர் 'அகரம்' எனும் பெயரில் ஒரு பொதுநலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.

சூர்யா ஜோதிகா ஜோடி :

சூர்யா ஜோதிகா ஜோடி :

நடிகை ஜோதிகாவைக் காதலித்துப் பெற்றோர் அனுமதியுடன் 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வெற்றிகரமான இந்தத் தம்பதிக்கு தேவ், தியா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் :

தயாரிப்பு நிறுவனம் :

சூர்யா தொடங்கிய '2D Entertainment' தயாரிப்பு நிறுவனம் '36 வயதினிலே', 'பசங்க 2', '24' படங்களைத் தயாரித்திருக்கிறது. அடுத்து ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தைத் தயாரித்து வருகிறது.

இப்படிக்கு சூர்யா :

இப்படிக்கு சூர்யா :

ஒருவரது வெற்றியை அவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை.உழைப்பு தான் தீர்மானிக்கிறது என்னும் தனது வாழ்க்கை அனுபவத்தை எழுத்துக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் முயற்சியாக தனது வாழ்க்கை வரலாறை 'இப்படிக்கு சூர்யா' எனும் புத்தகமாய் எழுதியிருக்கிறார் சூர்யா.

அறிவிப்பு வருமா? :

அறிவிப்பு வருமா? :

இன்று சூர்யா ரசிகர்கள், சூர்யாவின் இருபது வருட நிறைவை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். #Surya20 ஸ்பெஷலான இன்று, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீஸர், ட்ரெய்லர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

English summary
Saravanan changed his name as Surya for debut in 'Nerukku Ner' movie. It is 20 years now that Surya has stepped into the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil