»   »  மலையாளத்தில் சத்தம் போடாதே!

மலையாளத்தில் சத்தம் போடாதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் டப் செய்யப்படவுள்ள முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை வசந்த்தின் சத்தம் போடாதே படம் பெற்றுள்ளது.

பிருத்விராஜ், பத்மப்பிரியா இணையில், வசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சத்தம் போடாதே. ரொமாண்டிக் திரில்லர் படமாகும் இது. இந்தப் படம் இப்போது மலையாளத்தில் டப் செய்யப்படுள்ளது. மலையாளத்தில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வழக்கமாக பிற மொழிப் படங்கள் டப் செய்யப்படுவது இல்லை. காரணம், மலையாளத்தில் தயாரிக்காத படத்தையா பிற மொழிகளில் தயாரித்து விடப் போகிறார்கள் என்ற எண்ணம்தான்.

இந்த நிலையில்தான் சத்தம் போடாதே படம் அப்படியே மலையாளத்துக்குப் போகிறது. இதை ஆரம்பத்திலேயே தீர்மானித்துத்தான் படத்தின் நாயகனாக மலையாளத்து பிருத்விராஜையும், நாயகியாக மலையாளத்திலும் பிரபலமாகியுள்ள பத்மப்பிரியாவைப் போட்டார் வசந்த்.

கேரளாவில் தமிழ்ப் படங்களை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தரான திவா பிக்சர்ஸ் நிறுவனம்தான் சத்தம் போடாதே படத்தை மலையாளத்தில் டப் செய்யும் உரிமையை வாங்கியுள்ளது. தமிழில் படம் வெளியாகும் அதே நாளில் மலையாள சத்தம் போடாதே படமும் ரிலீஸாகிறதாம்.

படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களில் மிரட்டியுள்ளார் யுவன். சமீபத்தில் ஆடியோ வெளியீடு நடந்தது வெளிவந்தது முதலே படு சூடாக விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கிறதாம் பாடல் கேசட்டுகள். சிவாஜிக்கு அடுத்த இடத்தில் சத்தம் போடாதே படத்தின் பாடல்கள் உள்ளதே யுவனின் திறமைக்கு சான்றாகும்.

ஏற்கனவே நேரடியாக போய்க் கலக்கி வந்த தமிழ்ப் படங்கள் சத்தம் போடாதே மூலம் மறைமுகமாகவும் அசத்தப் போகின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil