»   »  சத்தம் போடாதே...

சத்தம் போடாதே...

Subscribe to Oneindia Tamil

வசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள சத்தம் போடாதே படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா அருமையான பாடல்களைப் போட்டுக் கொடுத்துள்ளார்.

வசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சத்தம் போடாதே. பத்மப்ரியா அசத்தலான ரோலில் நடித்துள்ளார். பிருத்விராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.

கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் வசந்த். எனவே சத்தம் போடாதே படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா ஐந்து பாடல்களைப் போட்டுக் கொடுத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி விட்ட நிலையில் படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்குமே என்பதற்காக அதிகாரப்பூர்வமாக ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் வசந்த்.

நிகழ்ச்சியில் ஐந்து பாடல்களையும் நேரடியாக பாட வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜாவே அந்த ஐந்து பாடல்களுக்கும் மேடையில் இசையமைத்தார்.

ஆடியோவை வசந்த்தின் குருவான கே.பாலச்சந்தர் வெளியிட திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஒவ்வொரு பாடலையும், இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, இமான், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

திரிஷா, சினேகா, ப்ரியா மணி, சந்தியா என நிகழ்ச்சி அரங்கமே அழகுப் பெண்களின் வருகையால் திணறிப் போனது. நடிகர்கள் ஜீவாவும், ஷாமும் கூட வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

படத்திற்குப் பெயர்தான் சத்தம் போடாதே, ஆனால் பாடல்கள் படு சவுண்டாக இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil