»   »  தங்கர் படத்தில் சத்யராஜ்

தங்கர் படத்தில் சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil

தங்கர் பச்சானின் அடுத்த படத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு பூஜையைப் போட்டார் தங்கர். ஒன்பது ரூபாய் நோட்டு என்ற அவரது கதைதான் அந்தப் படத்தின் கரு. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்த அப்படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ.

ஆனால் திடீரென சத்யராஜுக்கும், தங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே படம் டிராப் ஆனது. இதையடுத்து தென்றல் படத்தை இயக்கப் போய் விட்டார் தங்கர். அத்தோடு நின்று போனது தங்கர், சத்யராஜ் பட உறவு.

இப்போது இருவரையும் பெரியார் சேர்த்து வைத்துள்ளார். பெரியார் படப்பிடிப்பின்போது தங்கருக்கும், சத்யராஜுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு போயே போச்சாம். இதையடுத்து மீண்டும் இணைந்து புதுப் படம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கிறார். தங்கர் கெஸ்ட் ரோல் செய்கிறார். தனது சிறுகதை ஒன்றையே இப்படத்தின் கதையாக தேர்வு செய்யவுள்ளார் தங்கர்.

பெரியார் படத்துக்குப் பின்னர் சத்யராஜுக்கு வித்தியாசமான ஒரு சிக்கல் வந்து விட்டதாம்.

அதாவது அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் பெரியார் படத்தில் நடித்ததற்காகப் பாராட்டுவதோடு நில்லாமல் இனிமேல் சில்லித்தனமான கேரக்டர்களில் நடிக்காதீங்க, குறிப்பாக குத்துப் பாட்டுக்கு ஆடுவது, குண்டக்க மண்டக்க சண்டை போடுவது, சிறு பிள்ளைகளுக்கு ஜோடியாக நடிப்பது ஆகியவற்றை விட்டு விட்டு நல்ல கேரக்டர்களில் மட்டும் நடிங்க என்று அன்புக் கட்டளை இடுகிறார்களாம்.

அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துள்ள சத்யராஜ் இனிமேல் நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். லொள்ளுத்தனமான ரோல்களில் நடிக்க மாட்டாராம்.

அப்பாடா, தப்பித்தாரப்பா சிபி!

Please Wait while comments are loading...