»   »  சத்யராஜுக்கு டாக்டர் பட்டம்

சத்யராஜுக்கு டாக்டர் பட்டம்

Subscribe to Oneindia Tamil

மகா நடிகர் சத்யராஜ், தேனிசைத் தென்றல் தேவா ஆகியோருக்கு சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

முன்னாள் அதிமுக பிரமுகர் ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழம், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகம் முதலில் வழங்கிய டாக்டர் பட்டம் கலைஞானி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான டாக்டர் பட்டம் பெறுவோர் குறித்த விவரத்தை சத்யபாமா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நடிகர் சத்யராஜ், இசையமைப்பாளர் தேவா, டாக்டர் மயில்வாகணன் நடராஜன், சமூக சேவகர் எக்ஸ்னோரா நிர்மல் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

11ம் தேதி பல்கலைக்கழக அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது நான்கு பேருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை அளிக்கிறார்.

நடிகர் சத்யராஜ் 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தேவா, 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இதுதவிர 200க்கும் மேற்பட்ட பக்திப் பாடல் ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி இவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக சத்யபாமா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil