»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அழகேசன் படத்தில் ரஜினியை படு பயங்கரமாக நக்கல் செய்து நடித்துள்ளாராம் சத்யராஜ்.

16 வயதினிலே படத்தின் கதையை சுட்டு, மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கருமாடிக் குட்டன்(கலாபவன் மணி நடித்தது) என்ற படம் தமிழில் அழகேசன் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. கலாபவன் மணிநடித்த கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார்.

அசிங்கமான உருவ அமைப்பு, கிறுக்குத்தனமான செயல்கள் என வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்சத்யராஜ். இந்தப் படத்தில் ரஜினியை அநியாயத்துக்கு கிண்டலடித்துள்ளனராம். அடிக்கடி இமயமலைக்குப்போகும் ஒரு கேரக்டரை உருவாக்கி அதை பயங்கரமாக நக்கலடித்துள்ளாராம் சத்யராஜ்.

ரஜினியை மனதில் வைத்துத்தான் இந்த கேரக்டரை உருவாக்கியுள்ளார்கள் என்கிறார்கள்.

பாவம்பா ரஜினி, விட்டுடுங்கோ!

பிரஷாந்த் படத்தில் அப்பாஸ் வில்லன்

அப்பா தியாகராஜன் தயாரிக்க, மகன் பிரஷாந்த் மீனாவுடன் இணைந்து நடிக்கும் ஷாக் படத்தில் பல ஷாக்கிங்விஷயங்கள் இருக்குமாம்.

அதில் ஒன்றுதான் அந்தப் படத்தில் அப்பாஸ் வில்லனாக நடிப்பது. காதல் தேசம் படத்தில் நாயகனாக அறிமுகமாகிரோமியோ டைப் வேடங்களில் நடித்து வந்து பின்னர் மார்க்கெட் இழந்த அப்பாஸ் இப்போது சும்மா இருக்கிறார்.

இதையடுத்து ஷாக் படத்தில் ஒரு அட்டகாசமான ரோல் இருக்கிறது என்று கூறி அப்பாஸை அணுகியதியாகராஜன் இந்த வில்லன் வேடத்தைக் கொடுத்துள்ளார். முதலில் தயங்கிய அப்பாஸ், கேரக்டரின் ஆழத்தையும்,தனது பணப் பற்றாக்குறையையும் புரிந்து கொண்டு ஓகே சொல்லி விட்டாராம்.

ஷாக் படத்தை டி.டி.எஸ் தியேட்டரில் தனியாக பார்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகதியாகராஜன் அறிவித்தார். இதைக் கேட்டு, நான் ரெடி என்று ஒரு பெரிய கும்பலே தியாகராஜன் வீட்டிற்குபடையெடுத்து விட்டதாம். அவர்களைச் சமாளிப்பதற்குள் தியாகராஜனுக்கு விழி பிதுங்கிவிட்டதாம்.

மீனா படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளாராம். ரடிகர்கள் பயப்படாமல்இருந்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil