TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
எஸ்கேப்... சத்யம் சினிமாஸின் 8 புதிய தியேட்டர்கள்

சென்னையைப் பொறுத்தவரை சத்யம் சினிமாஸ் இதற்கு விதிவிலக்கு. திரையரங்குகளை சர்வதேச தரத்துக்கேற்ப மாற்றியமைத்த இந்த நிறுவனம், திரையரங்க தொழில்நுட்பத்தில் அவ்வப்போது ஏற்படும் நவீன மாறுதல்களை உடனுக்குடன் தங்கள் திரையரங்குகளிலும் புகுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறது. கட்டணம் அதி்கம், திரையரங்குக்குள்ளே திண்பண்டங்களின் விலை எக்கச்சக்கம் என்ற குறைகள் இருந்தாலும், அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வைக்கிறது சத்யம் சினிமாஸின் சுத்தம் மற்றும் தரம்.
ஏற்கெனவே 6 திரையரங்குகளுடன் செயல்பட்டு வரும் சத்யம், இப்போது சென்னையில் மேலும் 8 புதிய திரையரங்குகளைத் திறந்துள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் இவை செயல்படத் துவங்குகின்றன.
சென்னை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான எக்ஸ்பிரஸ் அவென்யூவில்தான் இந்த புதி்ய திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்கேப் சினிமா எனப் பெயரிடப்பட்டுள்ள இவற்றில் இரு திரையரங்குகள் தலா 300 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டவை. மற்ற 6 திரையரங்குகளிலும் தலா 120 பேர் அமர்ந்து பார்க்க முடியும். காலத்தின் அவசியம் கருதி இந்த மாதிரி சிறிய திரையரங்குகளை அதி நவீன வசதியுடன் அமைத்துள்ளனர்.
அனைத்து திரையரங்குகளுமே க்யூப் முறையில் இயங்கக் கூடியவை. கட்டணம் ரூ 120.