»   »  சிம்புவின் வில்லி சீமா

சிம்புவின் வில்லி சீமா

Subscribe to Oneindia Tamil

ரஜினியுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த அந்தக் கால கட்டழகி சீமா, சிம்புவின் காளை படத்தில் வில்லியாக வேடம் கட்டுகிறார்.

கேரளத்து சீமா, மலையாளத்தைப் போலவே தமிழிலும் பிரபலமானவர். அதிரடி நாயகியாகத்தான் இவர் பல படங்களில் நடித்துள்ளார். காளி உள்ளிட்ட சில படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.

பாபா படத்தில் மனீஷா கொய்ராலாவின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார் சீமா. அதன் பின்னர் அவரை பெரிய அளவில் படங்களில் பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் சிம்புவின் காளை படத்தில் வில்லியாக நடிக்கிறார் சீமா. தருண் கோபி இயக்கத்தில் உருவாகும் காளையில், சிம்புவுக்கு ஜோடியாக வருபவர் வேதிகா.

முனி படத்திற்குப் பின்னர் வேதிகாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தபோதும், காளை படத்தில் நடிக்க வேண்டும் என்று சிம்பு கேட்டவுடன் பட்டென்று ஒத்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்து விட்டாராம் வேதிகா. ஏன் என்றால், சிம்பு வல்லவன், நல்லவன், திறமையாளர் என பெரிய பாராட்டுப் பத்திரமே வாசிக்கிறார்.

காளை படக்குழுவினர் பாடல் ஒன்றைப் படம் பிடிப்பதற்காக விரைவில் ரஷ்யா கிளம்புகின்றனராம். சமீப காலமாக ரஷியாவுக்குப் போய் படம் பிடிப்பதில் தமிழ் சினிமாக்காரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஜெயம் ரவி நடிக்கும் தாம் தூம் படத்தின் படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தது. பெரியார் படத்துக்காகவும் ரஷியா போனார்கள். இப்போது சிம்பு அன் கோவும் ரஷியாவுக்குப் பறக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil