twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாமரையை பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய சீமான்.. அவருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா?

    |

    சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி பாடல் ஆசிரியர்களில் கவிஞர் தாமரையும் ஒருவராக இருந்து வருகிறார்.

    இலக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்த தாமரை, ஆரம்ப காலகட்டத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எழுதி வந்தவர்.

    முதல் முதலில் எப்படி "இனியவளே" என்ற திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது என்பதை தாமரை வெளிப்படையாக கூறியுள்ளார்.

    வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள்.. தாமரை வரிகளில் தரமான பாடல் வெளியானது! வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள்.. தாமரை வரிகளில் தரமான பாடல் வெளியானது!

    கவிதையின் மீது ஏற்பட்ட மோகம்

    கவிதையின் மீது ஏற்பட்ட மோகம்

    கவிஞர் தாமரைக்கு சிறு வயதிலிருந்து கவிதை,சிறுகதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். பல பத்திரிகைகளுக்கு தான் எழுதிய அணைத்து கவிதைகளையும் அனுப்பி பங்கேற்று அதற்கான பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றதோடு பாடல் ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பத்தில் சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

    இயக்குநர் 'சீமான்' ஏற்படுத்திக் கொடுத்த முதல் வாய்ப்பு

    இயக்குநர் 'சீமான்' ஏற்படுத்திக் கொடுத்த முதல் வாய்ப்பு

    பாடலாசிரியர் தாமரை திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இயக்குநர் சீமான் இவரது திறமையை உணர்ந்து, 1998 ஆம் ஆண்டு அவர் இயக்கிய "இனியவளே" திரைப்படத்திற்காக 'தென்றல் எந்தன் நதியை கேட்டது' என்ற பாடல் மூலம் பாடல் ஆசிரியராக தாமரையை அறிமுகப்படுத்தினார், இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

    சேற்றில் முளைத்த செந்தாமரை

    சேற்றில் முளைத்த செந்தாமரை

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "மின்னலே"திரைப்படத்தில் இவர் எழுதிய வசீகரா பாடல் மிகவும் புகழ்பெற்று அவரது வாழ்வில் ஒரு திருமுனையாக அமைந்தது. மின்னலே படத்திற்கு பிறகு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை இவர்களது கூட்டணி (காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் & வாரணம் ஆயிரம்) போன்ற படங்களில் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது, கவிஞர் 'தாமரை'எழுதிய பாடல்கள் மிகவும் பிரபலமானதோடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    ஆங்கில வார்த்தைகளை கலக்க மாட்டேன்

    ஆங்கில வார்த்தைகளை கலக்க மாட்டேன்

    நான் என்றும் மக்களுக்கான கவிஞர் தான் வியாபாரத்திற்கான கவிஞர் கிடையாது; நான் எழுதும் பாடல்கள் எதிலும் ஆங்கில வார்த்தைகளில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி கொண்டவர். திரைப்படம் என்னும் கவர்ச்சி போதையில் சிக்காமல், குத்து பாடல்கள், ஆபாச பாடல்கள், சமூகத்தை சீரழிக்கும் பாடல்கள் பிறமொழி பாடல்கள் என தமிழ் மொழியை கொச்சைப்படுத்தக்கூடிய வார்த்தைகளை கொண்டு பாடல்களை எழுத மாட்டேன் என்ற குறிக்கோளாக இருந்து கொண்டிருப்பவர். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல் தனது திரைத்துறை அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார் பாடலாசிரியர் தாமரை.

    English summary
    Poet Thamarai has been one of the leading lyricists in the Tamil film industry. Thamarai, who came to Chennai due to his interest in literature, poems, stories and essays in the early days. Thamarai has opened up about how she first got the opportunity to write a song for the movie "Iniyavale".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X