»   »  விஜய் சேதுபதி இனி 'மக்களின் செல்வன்' என்று அன்போடு அழைக்கப்படுவாராக!

விஜய் சேதுபதி இனி 'மக்களின் செல்வன்' என்று அன்போடு அழைக்கப்படுவாராக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அளித்திருக்கிறார். சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் கோலிவுட்டில் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தன.

Seenu Ramasamy given the title to Vijay Sethupathi

தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமியின் தர்மதுரை படத்தில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி கொடுத்திருக்கிறார்.

இதனால், இதுவரை எந்த பட்டமும் போட்டுக் கொள்ளாத விஜய் சேதுபதி இனி மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் வலம்வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் வெளியான சேதுபதி படத்தின் பேனர் மற்றும் கட்-அவுட்களில் சின்ன தல என்று விஜய் சேதுபதி ரசிகர்கள் அவருக்கு பட்டம் கொடுத்திருக்கின்றனர்.

இதனால் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இடையில் மோதல்கள் உருவாகியிருக்கிறது.

English summary
Director Seenu Ramasamy given the title of actor Vijay Sethupathi to the 'Makkal Selvan', in Dharma Durai Shooting Spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil