»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தனக்கு இன்னொரு ஆண் துணை தேவை இல்லை என்றும் நடிகர் பார்த்திபனுடன் மீண்டும் இணைந்து வாழவாய்ப்புள்ளது என்றும் நடிகை சீதா கூறியுள்ளார்.

தனது முதல் படமான புதிய பாதை படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சீதாவையை தனது வாழ்க்கைக்கும்ஜோடியாக ஆக்கிக் கொண்டார் பார்த்திபன். 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தவர்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டுபிரிந்தனர்.

பார்த்திபன்-சீதாவுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற 2 மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும்உள்ளனர். விவாகரத்துக்குப் பிறகு அபிநயா சீதாவுடனும் கீர்த்தனா, ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடனும்வசிக்கிறார்கள்.

திருமண முறிவுக்குப் பிறகு சீதாவைப் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் தொடர்ந்து உலாகி வருகின்றன.சின்னத் திரைநடிகர் சதீஷுடன் காதல், தயாரிப்பாளர்களுடன் தொடர்பு என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. இந் நிலையில் சீதாஅளித்த்துள்ள பேட்டியில்,

எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும். எனக்கு தெரிந்த தொழில்நடிப்பு என்பதால், அதை தொடர்கிறேன்.

ஒரு ஆளோடு வாழ்ந்து முடித்து விட்டேன். இன்னொரு திருமணம் என் வாழ்க்கையில் கிடையவே கிடையாது. என்வாழ்க்கையில் இன்னொரு ஆண் துணை அவசியம் இல்லை. என் குழந்தைகளுக்காக மட்டுமே நான் வாழநினைக்கிறேன்.

நடிகைகளுக்கு அழகு என்பது பெரிய பலம்தான். ஆனால் அதுவே சில சமயங்களில் பலவீனமாகவும் அமைகிறது.நான் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். எனக்கு ஆறுதல் சொல்ல நிறையபேர் வருகிறார்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறதோ தெரியவில்லை.

எந்த ஒரு தயாரிப்பாளருடனும் எனக்குத் தொடர்பு இல்லை. யாருடனும் நான் வெளியூர் செல்லவில்லை. இதுபோன்ற வதந்திகள் வரும்போது ஏன் நடிகையானோம் என்று சங்கடப்பட்டு இருக்கிறேன்.

எனக்கும் சின்னத்திரை நடிகர் சதீசுக்கும் இடையே தப்பான விஷயம் எதுவும் கிடையாது. அவர் ஒரு நல்ல நண்பர்.எனக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்.

பிரச்சினை இல்லாமல் வாழ நானும் பார்த்திபனும் ஆசைப்பட்டோம். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தோம்.இனி ஒருவரை பற்றி ஒருவர் விவாதிக்காமல் இருந்தால் தான், வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதையாக இருக்கும்.

எதிர்காலத்தில் நாங்கள் இணையவும் செய்யலாம். இணையாமலும் போகலாம். இணையக்கூடாது என்று நான்நினைக்கவில்லை. மனதை திறந்துதான் வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சீதா.

Please Wait while comments are loading...