»   »  மகளின் நிச்சயதார்த்தத்தில் விருந்தாளி போன்று கலந்து கொண்ட சீதா

மகளின் நிச்சயதார்த்தத்தில் விருந்தாளி போன்று கலந்து கொண்ட சீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil
மகளின் திருமணத்திற்காக ஒன்று சேர்ந்த பார்த்திபன் குடும்பம்..!!

சென்னை: நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார்.

நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார்.

 சீதா

சீதா

பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 அக்ஷய்

அக்ஷய்

கீர்த்தனாவும், அக்ஷயும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 18 வயதில் இருந்து அக்ஷயை காதலித்து வந்துள்ளார் கீர்த்தனா. அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

 மார்ச்

மார்ச்

கீர்த்தனா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம் 8ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

 பெருமை

பெருமை

என் மகள் காதல் திருமணம் செய்கிறாள். அவளின் காதலை நான் மதிக்கிறேன். நாங்களாக பார்த்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என்று சீதா தெரிவித்துள்ளார்.

 பிரபலங்கள்

பிரபலங்கள்

திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பத்திரிகை வைக்க செல்லும் இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

English summary
Actor cum director Parthiban's daughter Keerthana has got engaged to director Akshay. Actress Seetha attended her daughter's engagement. It is noted that Seetha and Parthiban got divorced.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil