»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்திபனை விட்டுப் பிரிந்த நேரமோ என்னவோ, சீதாவின் கையில் இப்போது 5 படங்கள் உள்ளன.

மாறன் படத்தில் சத்யராஜூடன் இணைந்து நடித்து வரும் சீதா, அந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் புகழ் பெறுவார் என்கிறார்கள். அத்தனை அற்புதமாக நடித்துள்ளாராம் அவர்.

முன்பை விட இரண்டு மடங்கு உற்சாகமாக காணப்படும் சீதாவிடம் பார்த்திபன் குறித்து மட்டும் ஏதாவது கேட்டுவிட்டால் போதும் மூட் அவுட் ஆகி விடுகிறார்.

அந்த டாபிக்கை விட்டு விட்டு வேறு ஏதாவது பேசச் சொல்கிறார். இல்லாவிட்டால் இடத்தை காலி செய்யச் சொல்லிவிடுகிறார்.

தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பார்த்திபன் தனது அலுவலகத்திலேயே தங்கிக் கொள்கிறார். இவன் படத்தில் பாடகியாக நடித்த நடிகைக்கும்பார்த்திபனுக்கும் இது என்று பேசிக் கொள்கிறார்கள்.

சீரியல் தயாரிக்கும் ஜோடி

தமிழில் காணாமல் போய் விட்ட நடிகர் ரஞ்சித்தும், அவரது மனைவி பிரியா ராமனும், மலையாளத்தில் டிவிசீரியல் தயாரிக்கிறார்கள்.

காதல் தம்பதிகளான ரஞ்சித்தும், பிரியா ராமனும் இடையில் சில காலம் பிரிந்திருந்தார்கள். பிரிந்த பின் பிரியாமலையாளத்திலும், ரஞ்சித் தமிழிலும் சில படங்களில் நடித்தார்கள்.

இருவருக்கும் சமீப காலமாக படங்கள் எதுவும் இல்லை. இந் நிலையில் இருவரும் மீண்டும் இணைந்தனர். ஒன்றுசேர்ந்து பாவைக்கூத்து என்ற பெயரில் ஒரு டிவி சீரியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil