»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழில் மாறன் படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரியான சீதாவுக்கு இப்போது தெலுங்கில் பிசியாகிவருகிறார்.

அண்ணி, அக்கா வேடம் தான் என்றாலும் கவர்ச்சியாக நடிக்கவும் சீதா முன் வந்துள்ளார். இதையடுத்து தெலுங்கில்அவருக்கு வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன.

தன்னை விட்டுப் பிரிந்து வாழும் சீதா இவ்வாறு தாராளமாக சினிமாவில் நடிப்பது பார்த்திபனுக்குப்பிடிக்கவில்லையாம். இருந்தாலும் நான் நடித்தே ஆவேன் என்று தீர்மானமாய் இருக்கிறார் சீதா.

கமல்- சரிகா பிரிவுக்கு சிம்ரன் காரணமாக இருந்ததுபோல பார்த்திபன்- சீதா பிரிவிலும் ஒரு திரையுலகப் பெண்தான் காரணமாகச் சொல்லப்படுகிறார். பாடகியான அந்தப் பெண் மீது பார்த்திபனின் கண் பட்டுவிட்டதால் சீதாபிரிய வேண்டி வந்தது.

பார்த்திபனை விட்டுப் பிரிந்து முதலில் வேலன் என்ற டிவி சீரியலில் நடித்தார். அங்கிருந்து இப்போது தெலுங்குசினிமாவில் காலடி வைத்துள்ளார். இவரது சொந்த ஊரும் ஆந்திரா தான். இதனால் அங்கு சென்றுதயாரிப்பாளர்களைச் சந்தித்து மாட்லாடி வாய்ப்புக்களைப் பிடித்து வருகிறார்.

இரு மகள்களையும் தன் வசமே சீதா வைத்திருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் தத்தெடுத்த மகனின் நிலை என்னஎன்று தெரியவில்லை. பிரிந்தே வாழ்ந்தாலும் இன்னும் இருவரும் விவாகரத்து கேட்கவில்லை என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil