»   »  ''ராமேஸ்வரம்''-சீமான் பாய்ச்சல்

''ராமேஸ்வரம்''-சீமான் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil
Jeeva with Bhavana in Rameswaram
என்று தாயகம் திரும்புவோம், எப்போது நமது துயரங்கள் தீரும் என்ற கவலையில் இருக்கும் இலங்கை அகதிகளை மோசமாக சித்தரிக்கும் வகையில் ராமேஸ்வரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் சீமான் கோபத்தை வெளியிட்டுள்ளார்.

புதுமுக இயக்குநர் செல்வம் இயக்க, ஜீவா, பாவனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராமேஸ்வரம். அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமின் பின்னணியில் நடிக்கும் காதல் கதை இது.

இதற்கு சீமான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை குறித்த முழுமையான விவரங்கள், உண்மைகள் நமக்கு தெரியாது. எனவே அந்த விவகாரத்தை திரைப்படமாக எடுக்க நினைப்பதையே தவிர்க்க வேண்டும். அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்களின் நிலையை இழிவுபடுத்தும் விதமாக, அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் படம் எடுப்பது தவறு.

இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபன், காதலிப்பது போல காட்டுவது சரியான செயலன்று. மீண்டும் எப்போது தாயகம் திரும்புவோம், பிரச்சினைகள் எப்போது தீரும் என்ற ஆதங்கத்தில், தவிப்பில் இருப்பவர்கள் காதலிப்பது போல காட்டினால் அது அவர்களை மோசமாக சித்தரிப்பது போலாகும் என்று கூறியிருந்தார் சீமான்.

இதற்கு செல்வம் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து செல்வம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் மீது தான் மட்டுமே பாசத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார் சீமான். அடுத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்ுத பாசம் காட்டினால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதனால்தான் எனது படம் குறித்து அவர் விமர்சித்துள்ளார். முதலில் எனது படத்தை அவர் பார்க்கட்டும், பிறகு பேசட்டும் என்று கூறியுள்ளார் செல்வம்.

செல்வம், சீமான் மீது பாய்ந்தாலும் கூட, ராமேஸ்வரம் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதையும், கதையின் போக்கு, கேரக்டர்கள் குறித்து ஆங்காங்கு சில அதிருப்திகளும் தலை தூக்கியிருப்பதை செல்வம் உணர வேண்டும். இது கூட சீமானின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil