»   »  ஷாருக்கை மிரட்டும் 'அண்டர்வோர்ல்ட் தாதா'!!

ஷாருக்கை மிரட்டும் 'அண்டர்வோர்ல்ட் தாதா'!!

Subscribe to Oneindia Tamil
sharukhkhan with Deepika
பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு பண்டி பாண்டே என்ற அண்டர்வோர்ல்ட் தாதா கும்பலிடமிருந்து ரூ. 2 கோடி பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ள கான், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது ஓம் ஷாந்தி ஓம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் பண்டி பாண்டே என்ற தாதாவிடம் இருந்து அவருக்கு இந்த பண மிரட்டல் வந்துள்ளது.

மும்பை திரையுலகினர், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழில்துறையினரை மிரட்டி பணம் பறித்து வரும் தாவுத் இப்ராகிம், சோட்டா ராஜன் வரிசையில் இந்த பண்டி பாண்டேவும் மிகவும் பிரபலம்.

ஷாருக்குக்கு கடந்த ஒரு வாரத்தில் பல முறை பண்டியிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டனவாம். மேலும் 6 குண்டர்களையும் நேரில் அனுப்பியும் ரூ. 2 கோடி கேட்டு ஷாருக்கை மிரட்டியுள்ளான் பண்டி. இதையடுத்து தீவிரவாதத் தடுப்பு போலீசாரிடம் நேரில் புகார் அளித்துள்ளார் ஷாருக்.

ஆனால், இதை ரகசியமாக வைக்குமாறு ஷாருக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால், ஷாருக் தங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை. அவருக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என மும்பை போலீசார் கூறுகின்றனர்.

அதே போல ஷாருக்கும் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் ரகசிய விசாரணை ஆரம்பித்துவிட்டது.

இந்த பண்டி பாண்டே முன்பு சோட்டா ராஜனின் கையாளாக இருந்தவன். பின்னர் அந்தக் கும்பலில் இருந்து பரத் நேபாளி, அஜய் மொகிதே ஆகியோருடன் பிரிந்து வந்து தனி கேங்கை உருவாக்கினான்.

அண்டர்வோர்ல்ட் தாதாக்களால் பணம் கேட்டு ஷாருக் மிரட்டப்படுவது இது முதல் முறையல்ல. தில் தோ பாகல் ஹை படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அபு சலேம் கும்பல் ஷாருக்கை மிரட்டி தங்களது பினாமி தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கச் ெசான்னது. ஆனால், அதில் நடிக்க ஷாருக் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil