»   »  ரூ. 27 கோடி வருமான வரி செலுத்திய ஷாருக் கான்

ரூ. 27 கோடி வருமான வரி செலுத்திய ஷாருக் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sharukhan
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் 2007ம் வருடத்தில் ரூ.27 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கடந்த வருடம் நடித்த சக்தே இந்தியா, ஓம் சாந்தி ஓம் ஆகிய இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆகின.

குறிப்பாக ஓம் சாந்தி ஓம் பெரும் வசூல் சாதனை படைத்தது. உலக அளவில் இப்படம் பெரும் வசூலை வாரியது. இதன் மூலம் ஷாருக்கானின் வருமானம் பலமடங்கு அதிகரித்தது.

சினிமா தவிர டிவி நிகழ்ச்சிகள், ஏராளமான விளம்பர படங்களில் நடித்தும் வருவாய் ஈட்டுகிறார் ஷாருக். ஸ்டார் டிவியில் நடத்திய கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியில் மட்டும் பல கோடிகளை அள்ளினார்.

குரோர்பதி நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் பங்கேற்க ரூ.1 கோடி சம்பளமாக அவருக்குத் தரப்பட்டது.

சினிமா, விளம்பரம், டிவி என அனைத்திலும் ஒன் மேன் ஆர்மியாக கலக்கி வரும் ஷாருக் கானின் 2007ம் ஆண்டு வருமானம் ரூ.100 கோடியை எட்டியது.

இதையடுத்து வருமான வரியாக ரூ.27 கோடியை செலுத்தியுள்ளார் ஷாருக். இவருக்கு அடுத்தபடியாக அக்ஷய்குமார் ரூ.7 கோடியும், அபிஷேக் பச்சன் ரூ.3.7 கோடியும், அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய் ரூ.1.6 கோடியும், கரீனாகபூர் ரூ.1 கோடியும் வருமான வரி கட்டியுள்ளனர்.

ஷாருக்கான் 2006ல் ரூ.18 கோடி வருமான வரி செலுத்தினார். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.9 கோடி கூடுதலாக வருமானவரி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil