»   »  கன்னடத்தில் ஷகீலா

கன்னடத்தில் ஷகீலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகெங்கிலும் உள்ள மலையாள ரசிகர்களை பல காலத்திற்கு தனது பலான திறமையால் மயக்கி வைத்திருந்த ஷகீலா இப்போது கன்னட ரசிகர்களை கண்டக்க முண்டக்க கலக்க வருகிறார்.

சென்னையிலிருந்து கேரளாவுக்கு ஷிப்ட் ஆனவர் ஷகீலா. ஆரம்ப கால ஷகீலா, ஓமக்குச்சி நரசிம்மன் போல படு ஒல்லியாக இருந்தவர். ஆனால் கேரளாவுக்குப் போய் ஊட்டமாகி, பலான படங்களில் நடித்து அசத்த ஆரம்பித்தார்.

மம்முட்டி, மோகன்லால் படங்களே ஓட முடியாத அளவுக்கு ஷகீலாவின் படங்கள் சகட்டுமேனிக்கு வசூலை வாரிக் குவித்தது. இப்படியே விட்டால் நிலைமை மகா மோசமாகிப் போகும் என்று பயந்த மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒன்று கூடி, ஷகீலாவுக்கு ஆப்பு வைத்து அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

இப்படியாக சென்னைக்கே திரும்பி வந்த ஷகீலா, தற்போது காமெடிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும், தெலுங்கிலும் அவரது கிளாமர் கலந்த காமெடிக் காட்சிகளைக் காணும் பாக்கியம் அவ்வப்போது ரசிகர்களுக்குக் கிடைக்கிறது.

இந்த நிலையில்தான் ஷகீலாவே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு சூப்பர் சான்ஸ் வந்துள்ளது. அதுவும் கன்னடத்திலிருந்து. ஷகீலா ரொம்ப காலத்திற்கு முன்பு திறமை காட்டிய மலையாளப் படம் சமீபத்தில் கர்நாடகத்தில் வெளியானது.

பெங்களூர், மைசூர் என போட்ட இடம் எல்லாம் அப்படத்துக்கு செம வசூலாம், வரவேற்பாம். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் அப்படம் அமோக வசூலை அள்ளி வருவதால் தியேட்டர்கார்ரகள் சந்தோஷமாகியுள்ளனராம்.

ஷகீலாவின் திறமை கன்னட ரசிகர்களின் உணர்ச்சிகளை குழப்பி, கொப்பளிக்க வைத்து விட்டதாம். இதனால், மேலும் சில தியேட்டர்களிலும் ஷகீலா படங்களைப் போட திட்டமிட்டுள்ளனராம்.

இதை விட முக்கியமாக ஷகீலாவை வைத்து நேரடியாக படம் எடுக்கவும் சில கன்னட தயாரிப்பாளர் விரும்புகிறார்களாம். இதற்காக சமீபத்தில் ஒரு குரூப் கிளம்பி வந்து ஷகீலாவை சந்தித்துப் பேசியுள்ளதாம்.

மறுபடியுமா என்று அவர்களிடம் அலுப்பாக கேட்டுள்ளார் ஷகீலா. உடனடியாக பதில் ஏதும் சொல்லாமல், யோசித்து சொல்வதாக கூறி அனுப்பி வைத்தாராம்.

மறுபடியும் ஷகீலா அலை வருமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil