»   »  போராடும் ஷகீலா!

போராடும் ஷகீலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் என்ற பெயரில் ஆண்களிடம் ஏமாந்து சீரழியும் பெண்களுக்கு நல் வழி காட்டும் சூப்பர் கேரக்டரில் கவர்ச்சிப் புயல் ஷகீலா பூச்சி என்ற படத்தில் நடிக்கிறாராம்.

மலையாள ரசிகர்களை தனது மலைக்க வைக்கும் கவர்ச்சியால் மயக்கடித்து வந்த ஷகீலா இப்போது முழு நீள கவர்ச்சிக்கு விடை கொடுத்து விட்டார். முன்பு போல ஷகீலாவைக் காண முடியாத ஏக்கம் இன்னும் மலையாள ரசிகர்களிடமிருந்து போகவில்லை.

மீண்டும் வருவார் ஷகீலா, தொடர்ந்து கவர்ச்சி தரிசனம் தருவார் என்று இன்னும் கூட பல ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனராம். ஆனால் பிட் ரோல்களுக்கு விடை கொடுத்து விட்ட ஷகீலா இப்போது பிட்டுப் பிட்டு கேரக்டர்கள் கொடுத்தாலும் போதும் என்று கேட்டு வாங்கி குணச்சித்திர கேரக்டர்களில் (கொஞ்சம் போல கிளாமருடன்) நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்குப் படங்களில் இப்போது ஷகீலாவை அதிகம் காண முடிகிறது. சமீபத்தில் கூட பழனியப்பா கல்லூரி படத்தில் சிவகாசி ஜெயலட்சுமி நடிப்பதாக இருந்து பின்னர் முடியாது என்று கூறி விட்ட கேரக்டரை தானே முன்வந்து நடித்துக் கொடுத்தாராம். இதனால் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனுக்கு ஏற்படவிருந்த சில லட்சம் இழப்பு தவிர்க்கப்பட்டதாம்.

இந்த நிலையில் பூச்சி என்ற படத்தில் அருமையான கேரக்டரில் நடித்து வருகிறார் ஷகீலா. இளம் வயதில் காதலனை நம்பி சீரழிந்த பெண்ணாக இதில் வருகிறார் ஷகீலா.

தான் ஏமாந்தது போல பிற பெண்களும் ஏமாறக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், தவறான வழியில் போய் வாழ்க்கையைக் குலைத்துக் கொண்ட பெண்களுக்கு உதவும் சமூக சேவகி வேடமாம் ஷகீலா.

சமூக சேவகி வேடம் என்றாலும் கூட கொஞ்சம் போல கிளாமரும் உண்டாம். இல்லாவிட்டால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகிப் போய் விடுமே. இதற்காக அவருக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் சில காட்சிகளை வைத்துள்ளனராம்.

ஷகீலாவின் அழகில் மயங்கும் பாஸ்கர், அவரை அடைய பலவிதமான வேடங்களில் வந்து முயற்சிக்கிறார். இந்தக் காட்சிகளில் காமெடியோடு, கிளாமரும் பின்னிப் பிணைந்திருக்குமாம்.

அப்படீன்னா ஓ.கே.தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil