»   »  தொட்டால் பூ மலரும் ஆடியோ

தொட்டால் பூ மலரும் ஆடியோ

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி ஹீரோவாக அறிமுகமாகும் தொட்டால் பூ மலரும் படத்தின் ஆடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட அதன் முதல் பிரதியை கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

சந்திரமுகியை முடித்த கையோடு தனது மகன் ஷக்தியை (சின்னத் தம்பி படத்தில் குட்டி பிரபுவாக வந்தாரே, அந்தப் பையன்தான் இப்போது வளர்ந்து வாலிபனாகி, ஹீரோவாகவும் மாறி விட்டார்) ஹீரோவாகப் போட்டு தொட்டால் பூ மலரும் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் வாசு. இதில் ஹீரோயினாக கௌரி முஞ்சல் நடிக்கிறார்.

படம் முடிந்து விட்டது. ஆனால் அடுத்த ரஜினி படம் குறுக்கிட்டு விட்டதால் படத்தை ஒத்தி வைத்துள்ளார் வாசு. பட பூஜையின்போது ரஜினியும், கமலும் இணைந்து கலந்து கொண்டு ஷக்தியை ஆசிர்வதித்தார்கள். சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதிலும் இருவரும் கலந்து கொண்டனர்.

கேசட் வெளியீட்டுக்குப் பின்னர் வாசு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நானே நடிகராக வர வேண்டும் என முன்பு நினைத்தவன்தான். ஆனால், இயக்குநராகி விட்டேன்.

எனது இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது எனது மகனுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு கடு கடுப்பான, கண்டிப்பான மன நிலையில் அவன் என்றுமே என்னைப் பார்த்ததில்லை என்றார் சிரித்துக் கொண்டே.

ஹீரோ ஷக்தி பேசுகையில், நடிகராக வேண்டும் என்ற எனது தந்தையின் ஆசை நிறைவேறவில்லை. அதை நான் நிறைவேற்றி வைத்துள்ளேன்.

கடுமையாக உழைத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக கடுமையாக பாடுபடப் போகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனது குரு. அவர் எனக்கு நிறைய அட்வைஸ் செய்துள்ளார். நடிப்புக்கு சில டிப்ஸ்களையும் கூட கொடுத்துள்ளார் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil