»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சலனம் தொடரின் நாயகியான ஷாலினி சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தை இயக்கிய தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கப் போகும் 7-ஜி, ரெயின்போகாலனி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷாலினி.

படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கப் போகிறாராம். முக்கிய ஹீரோயின் பாய்ஸ் பட நாயகியானஹரிணி நடிக்க உள்ளார் என்கிறார்கள்.

படத்தைத் தயாரிப்பது பாய்ஸைத் தயாரித்த அதே ஏ.எம்.ரத்னம் தான். ஹீரோ அவரது இரண்டாவது மகனான ரவிகிருஷ்ணா.

முதலில் ரெயின்போ காலனி என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் இப்போது 7-ஜி, ரெயின்போ காலனியாகமாற்றப்பட்டுள்ளது.

தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்திற்கு இசை யுவன்சங்கர்ராஜா.

தனி ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லையே என்று வருத்தமா என்று கேட்டால், இல்லவே இல்லைஎன்கிறார். எனக்கு இருக்கவே இருக்கு டி.வி.

என்னுடைய முதல் சாய்சும் டிவிக்குத் தான். நல்ல ரோல்கள்கிடைத்தால் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil