»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ஷாம், மும்பையைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்கிறார். வரும் 15ம் தேதி சென்னையில்அவர்களது திருமணம் நடக்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஷம்சுதீன் இப்ராகிம் தான் ஷாம் என்ற பெயரில் நடித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்தவராகஇருந்தாலும் வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்தான். அங்குள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காம்படித்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும்போதே காஷிஸ் என்ற மாணவியை காதலிக்கத் தொடங்கினார் ஷாம். பின்னர் படிப்பைபாதியில் விட்டுவிட்டு மாடலிங்குக்காக மும்பை போனார்.

காஷிஸின் சொந்த ஊர் பஞ்சாப். ஆனால் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அவரும் முஸ்லீம் தான். ஷாமுக்குதமிழ்ப் பட வாய்ப்புகள் வந்ததும் சென்னை வந்து விட்டார், காஷிஸ் படிப்பு முடித்துவிட்டு மும்பை சென்றுவிட்டார். இருந்தாலும் இவர்களது காதல் தொடர்ந்தது. அதை இருவருமே வீட்டில் மறைத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் ஷாமுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந் நேரம் பார்த்து தனது காதல் கதையைவீட்டில் அவிழ்த்து விட்டார் ஷாம். காதலுக்கு வீட்டில் பச்சைக் கொடி காட்டினர்.

இதையடுத்து இரு வீட்டினரும் பேசி ஷாம்-காஷிஸ் திருணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 15ம் தேதிசென்னை ஷெனாய் நகரில் உள்ளது அவரது வீட்டில் திருமணம் நடக்கிறது. மாலை கிண்டி லீ மெரிடியன்ஹோட்டலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 ஆண்டு காலக் காதல், திருமணத்தில் முடிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil