»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நாய் பிரச்சனை காரணமாக தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு மனைவியுடன் வீட்டை விட்டுவெளியேறியுள்ளார் நடிகர் ஷாம்.

சிவங்கை மாவட்டம் திருபபத்தூரைச் சேர்ந்தவர் ஷாம். 12 பி படத்தில் அறிமுகமானார். வேகமாக முன்னுக்கும்வந்து கொண்டிருக்கிறார். பெங்களூரில் தன்னுடன் படித்த கஷிஸ் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து மனைவியுடன் சென்னை செனாய் நகரில் உள்ள தனதுபெற்றோரின் வீட்டில் சேர்ந்தே வசித்து வந்தார் ஷாம்.

கஷிஸ் நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் மிக்கவராம். பெங்களூரில் பல வகை நாய்களை வளர்த்து வந்தாராம். அதேபோல கணவர் வீட்டிலும் நாய் வளர்க்க விரும்பினார். ஆனால், அதை ஷாமின் தாயார் அனுமதிக்கமறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து மனைவிக்காக பெற்றோருடன் மோதியுள்ளார் ஷாம். ஏற்கனவே மிக மிக வசதியான குடும்பம்என்பதால் உன் வருமானத்தை நம்பி நாங்கள் இல்லை. நாங்கள் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம் என தாயார்கூறிவிட்டதாகத் தெரிகிறது.

தாயாரும் ஷாமின் அண்ணனும் வேறு ஒரு பங்களா வாங்கும் முயற்சிளில் இறங்கியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil