»   »  கனடா பறந்தார் ஷங்கர்

கனடா பறந்தார் ஷங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஓய்வுக்காக குடும்பத்துடன் கனடாவுக்குப் பறந்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

பெரும் பெரும் பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுத்து வருபவர் ஷங்கர். இவரது அகராதியில், குறைந்த பட்ஜெட் படம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஷங்கரின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படம் சிவாஜி.

ஒவ்வொரு படத்தையும் முடித்த பின்னர் குடும்பத்துடன் ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று ஓய்வு எடுப்பது ஷங்கரின் வழக்கம். காதலன் படத்திலிருந்தே இந்த பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார் ஷங்கர்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூட சிவாஜி பட வேலைகள் முடிந்த பின்னர் தனது மனைவி கூறும் நாட்டுக்கு குடும்பத்தோடு செல்வேன் என்று கூறியிருந்தார் ஷங்கர்.

இந் நிலையில் சிவாஜி தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் வெளிநாட்டுக்குக் கிளம்பி விட்டார் ஷங்கர். கனடாவுக்கு மனைவி குழந்தைககளுடன் ஜாலி டிரிப்பாக சென்றுள்ளார் ஷங்கர்.

2 நாட்களுக்கு முன்பு ஏவி.எம். நிறுவனத்திற்கு வந்தார் ஷங்கர். அங்கு சிவாஜி தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். சிவாஜி படத்தை தயாரிப்பாளர்களுடன் அமர்ந்து முழுமையாக ஒருமுறை அப்ேபாது ஷங்கர் பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் கேன்ஸ் பட விழாவுக்கு சென்றபோது அங்கிருந்தபடி தனது உதவியாளர்களிடம் சொன்ன திருத்தங்கள் சரியாக வந்திருக்கிறதா என்பதையும் ஒருமுறை செக் செய்து ெகாண்டார்.

அதன் பின்னர் நேற்று தனது குடும்பத்துடன் கனடாவுக்குக் கிளம்பிச் சென்றார். அங்கு ஒரு மாதம் அவர் ஓய்வெடுக்கவுள்ளார். சிவாஜி பட ரிலீஸின்போது ஷங்கர் இந்தியாவிலேயே இருக்க மாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil