»   »  ஷங்கர் இயக்க..ஷாருக் தயாரிக்கும் ரோபோட்

ஷங்கர் இயக்க..ஷாருக் தயாரிக்கும் ரோபோட்

Subscribe to Oneindia Tamil

ஷங்கர்-ஷாருக் கான் இணைந்து உருவாக்கப் போகும் இந்தியாவின் முதல் ஹை-டெக் படமான ரோபோட் அடுத்த சில வாரங்களில் ஆரம்பமாகப் போகிறது.

இதுவரை கிசுகிசு அளவில் மட்டுமே தகவலாக உலவி வந்த இருந்து வந்த இந்த புராஜெக்ட் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

சிவாஜி படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் உருவாக்கப் போகும் இந்தப் படத்தின் பட்ஜெட் இதுவரை இந்தியா சினிமா கனவிலும் நினைத்துப் பார்த்திராதது என்கிறார்கள். கிட்டத்தட்ட ரூ. 100 கோடி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

சுஜாதா எழுதப் போகும் சயின்ஸ் பிக்ஷனை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகப் போகிறது. படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார்களாம். பின்னர் தமிழ், தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

படத்தை தயாரிக்கப் போவது ஷாருக் கானே தான். அவரது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் படத்தை பிரமாண்டமான உருவாக்கப் போகிறது.

இசை வழக்கம்போல் ஷங்கருக்கு மிகப் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானே தான்.

இன்னும் ஹீேராயின், டெக்னீஷியன்கள் உள்ளிட்டவர்கள் முடிவாகவில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil