»   »  ஷங்கர்... பிரமாண்டத்தின் இன்னொரு பெயர் ஷங்கர்! #HBDShankar

ஷங்கர்... பிரமாண்டத்தின் இன்னொரு பெயர் ஷங்கர்! #HBDShankar

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள்.

கும்பகோணத்தில் 1963-ம் ஆண்டு பிறந்தவர் ஷங்கர். இன்று இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவர்.

 சினிமா அறிமுகம் :

சினிமா அறிமுகம் :

டிப்ளமோ படிப்பை முடித்தவர், வேலைக்குச் சேர்ந்ததும் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இயக்கிய முதல் படமே ஹிட் அடித்தது. அடுத்தடுத்த படங்களும் அதிரிபுதிரி ஹிட்.

 முன்னணி இயக்குநர் :

முன்னணி இயக்குநர் :

கமல ஹாசனை வைத்து மூன்றாவது படம், ஐஸ்வர்யா ராயை வைத்து நான்காவது படம் என ஷங்கர் தொட்டதெல்லாம் டாப் கியர். 100 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ்ப்பட இயக்குநர் எனும் சாதனையை ரஜினி நடித்த 'சிவாஜி - த பாஸ்' மூலம் பெற்றார். உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி... அறிமுகமில்லாத நடிகராக இருந்தாலும் சரி... முழு உழைப்பைக் கொட்டி விளைச்சலை அறுவடை செய்பவர். ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் டைரக்டர்களின் மத்தியில், ஷங்கரின் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நாயகர்கள் இந்திய சினிமாவில் ஏராளம்.

 பிரமாண்டத்தின் மற்றொரு பெயர் :

பிரமாண்டத்தின் மற்றொரு பெயர் :

ஷங்கரின் அகராதியில் முடியாதது என ஒன்றுமே இல்லை. மலைக்கும், மரங்களுக்கும் நிறம் மாற்ற வேண்டுமானால், கிராஃபிக்ஸ் செய்துகொள்ளலாம் என சமரசம் செய்துகொள்கிற மனிதர் இல்லை அவர். உண்மையாகவே சிவப்பு மலையையும், நீல மரங்களையும் தேடிப் புறப்படுகிறவர். அவரது சிந்தனை சின்னதாகவெல்லாம் இருந்ததில்லை. ஆல்ப்ஸ் மலைக்கு ஷூட்டிங் போவார். உலக அதிசயங்கள் அத்தனையையும் ஒரே பாடலில் காட்டுவார்.

 ஹாலிவுட்டுக்கே டஃப் ஃபைட் கொடுப்பார் :

ஹாலிவுட்டுக்கே டஃப் ஃபைட் கொடுப்பார் :

நூறு யதார்த்தப் படங்கள் கொடுத்தாலும், வர்த்தக ரீதியாக சினிமாவை உச்சத்திற்கு இட்டுச் செல்ல ஷங்கர் போல ஒரு இயக்குநர் அவசியம் தேவைதான். ஒரு படம் கடல் கடந்து வேறு நாடுகளில் வர்த்தகம் செய்யப்படும்போதுதான் அந்த சினிமா உலகம் முழுவதுமான சினிமா ரசிகர்களின் பார்வைக்குச் செல்லும். அந்த வகையில், ஹாலிவுட் படங்களைப் போல டெக்மாலஜி ரீதியாகவும் சிந்திக்கிற இயக்குநர் ஷங்கர்.

 தயாரிப்பாளர் அவதாரம் :

தயாரிப்பாளர் அவதாரம் :

முதன்முதலில், தான் இயக்கிய 'முதல்வன்' படத்தைத் தனது 'எஸ் பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்த ஷங்கர் 'காதல்', 'வெயில்', 'கல்லூரி', உட்பட எட்டுப் படங்களைத் தயாரித்திருக்கிறார்.

 ஷங்கர் க்ளிஷே :

ஷங்கர் க்ளிஷே :

பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு சென்டிமென்ட் ஒன்றும் இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது மக்களிடம் மைக்கைக் கொடுத்து கருத்துக் கேட்பார். 'முதல்வன்' படத்தில் தொடங்கி 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி' என ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் மக்களிடம் மைக்கை நீட்டிக் கருத்து கேட்கும் காட்சி இருக்கும். அவரைப் பார்த்து இப்போ நிறைய பேர் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, விதை ஷங்கர் போட்டது!

Read more about: shankar, director, ஷங்கர்
English summary
Director Shankar's birthday is today. He is an icon of tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil