ஸ்பெஷல்ஸ்
பாய்ஸ் பட எதிர்ப்பால் துவண்டு போயிருந்த ஷங்கருக்கு ஆறுதல் கூறி தனது புதிய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
ஏ.எம்.ரத்னத்தின் பிரமாண்ட தயாரிப்பான பாய்ஸ் படு பயங்கர எதிர்ப்பை சம்பாதித்ததுடன், பெரும் நஷ்டத்தையும் கொடுத்துவிட்டதால், அப்செட் ஆகிப் போன ஷங்கர் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். ரத்னமோ தனது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிவரும் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
இந்த நிலையில் ஷங்கரை போனில் பிடித்த ரவிச்சந்திரன், பாய்ஸ் தோல்வியால் துவள வேண்டாம். எனது படத்தை நீங்கள்தான்இயக்குகிறீர்கள் என்று கூறியுள்ளார். அவரது ஆறுதல் பேச்சால் சந்தோஷமான ஷங்கர் உடனடியாக ஓ.கே சொல்லி விட்டார்.
ஊர் திரும்பியவுடன் புதிய படத்தை இயக்கப் போகிறார் ஷங்கர். இதில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகிறது. அவருக்குஜோடியாக அனேகமாக திரிஷா நடிக்கலாம். இந்தப் படத்தின் கதை ஏற்கனவே ஷங்கரிடம் உள்ளதால், உடனடியாக படப்பிடிப்புதொடங்கும் என்று கூறப்படுகிறது.
கமான், ஷங்கர்!


Click it and Unblock the Notifications











