»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்துக்கு எதிரான கண்டனக் கணைகளால் வெளிநாட்டுக்குப் பறந்து விட்டதாக கூறப்பட்ட இயக்குனர் ஷங்கர் எங்கேயும்போகவில்லையாம். பக்கத்திலேயேதான் இருக்கிறாராம்.

பாய்ஸ் படத்தில் வரலாறு காணாத அளவுக்கு பச்சை வசனங்கள் இருப்பதால் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தைஇயக்கிய ஷங்கரும், வசனம் எழுதிய சுஜாதாவும் அதுகுறித்து எதுவும் பேசாமல் மெளனம் சாதிக்கின்றனர்.

ஷங்கர் திடீரென்று ஜப்பான் கிளம்பிப் போய் விட்டதாக அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் கூறினர். ஆனால் ஷங்கர் ஜப்பான்போகவில்லையாம். கர்நாடகத்தில்தான் இருக்கிறாராம். பெங்களூரில் தான் அவர் இருப்பதாக கூறிக் கொள்கிறார்கள்.

அங்கிருந்தபடியே பாய்ஸ் நிலவரத்தையும், சென்னையில் நிலவும் சூழ்நிலையையும் கண்காணித்து வருகிறாராம்.

தற்போது புக் ஆகியுள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த ஆலோசனையிலும் இறங்கிவிட்டாராம். இதற்காகஷங்கரின் உதவியாளர்கள் சிலர் பெங்களூர் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனராம்.

பி.கு:

பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடன் இதழ் விமர்சனம் எழுத மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு அந்த இதழ்ஒரே வார்த்தையில் தந்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?.

சீ என்பது தான்.

முன்பு துள்ளுவதோ இளமை படம் வெளிவந்தபோது, அதில் இருந்த ஆபாசத்தைக் கண்டிக்கும் விதமாக, இதுவிமர்சனம் எழுத லாயக்கில்லாத படம் என்று விகடன் குறிப்பிட்டது. அந்தப் படத்தைத் தொடர்ந்து விகனிடம்நறுக் என கொட்டு வாங்கியுள்ள படம் பாய்ஸ் தான்.

வெல்டன் விகடன்!

  • அடுத்த படத்திற்கு ஷங்கர் ரெடி!
  • பாய்ஸை எதிர்த்து தியேட்டர் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
  • பாய்ஸ் மீண்டும் சென்சார் செய்யப்படுமா?
  • பாய்ஸ் ஆபாச காட்சிகளுக்கு கத்திரி போடுகிறார் ஷங்கர்
  • "நாய்ஸ்" அடங்கிய "பாய்ஸ்"
  • மகள்களுடன் "பாய்ஸ்" பார்க்கவில்லை: ரஜினி
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil