»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மலையாள சினிமா உலகில் ஷகீலா, சஜினிக்குப் போட்டியாக இன்னொரு மெகா மங்கையும் கவர்ச்சிக் குளத்தில் தொபுக்கடீர் என்று குதித்துள்ளார். இவர்தமிழகத்தில் இருந்து மலையாளக் கரையோரம் ஒதுங்கியவர்.

ஷகீலா அலை மலையாள திரையுலகில் ஓய்ந்து விட்டது. இப்போது சஜினிதான் அங்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக சிலர் இப்போதுகிளம்பியிருக்கிறார்கள். அத்தனை பேரும் ஷகீலா, சஜினி போல மெகா சைஸ் மங்கைகள்தான். அவர்களில் ஒருவர்தான் ஷர்மிளா.

இந்த ஷர்மிளா யார் தெரியுமா? நம்ம ஷர்மிலியின் அக்கா தான். முன்பு கவுண்டமணியுடன் ஜோடியாக நடித்து வந்த குலுக்கல்திலகம் ஷர்மிலியும் இப்போது மலையாளத்தில் அது மாதிரி படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து பொறாமைப்பட்ட அக்கா ஷர்மிளா, தானும் நடிக்கப் போவதாக கூறி களம் இறங்கிவிட்டாராம். ஆசிர்வாதம் செய்து சிலரிடம் அறிமுகப்படுத்தினாராம் ஷர்மிலி.

இப்போது சஜினியை வீழ்த்திக் காட்டுவதே தனது லட்சியம் என்று கூறி வரும் ஷர்மிளா, எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார்என்று மார் தட்டிக் கூறியுள்ளார்.

ஷகீலா, சஜினி ஆகியோருக்கு இணையாக தன்னிடம் அத்தனை அம்சங்களும் இருப்பதாக திறந்த மனதுடன் கூறி வரும் இவரைசில மலையாளத் தயாரிப்பாளர்கள் அம் மாதிரி படங்களுக்கு புக் செய்துள்ளனராம்.

இப்படி அலை, அலையாக கிளர்ந்து வரும் கவர்ச்சியால் மலையாளப் படவுலகம், விரைவில் மீண்டும் ஆபாச படங்களின்ஜங்ஷனாக மாறி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அங்கு எச்சரிக்கைக் குரல்கள் எழுந்துள்ளன.

விரைவில் தங்கச்சி ஷர்மிலியுடன் சேர்ந்து ஷர்மிளாவும் ஒரு கலக்கு கலக்குவார் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil