»   »  ஷெரீனின் பரீட்சை

ஷெரீனின் பரீட்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஷெரீனுக்கு அடுத்த மாதம் பரீட்சை வருகிறதாம். அனல் பறக்க படித்துக் கொண்டிருக்கிறார்.

பெரிய லெவலுக்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷெரீன், பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டு துண்டு துக்கடவாகி விட்டார். இடையில் பெரும் கேப் விழுந்த நிலையில் தமிழில் மீண்டும் ஷெரீனுக்கு சில வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

உற்சாகம் என்ற படத்தில் படு உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஷெரீன். ரவிச்சந்திரன் இயக்குகிறார். நந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷெரீன்.

இதுதவிர பீமாவில் விக்ரமுடன் கப்பலில் நடுக் கடலில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியிருக்கிறார் ஷெரீன்.

இடையில் விழுந்த கேப்பைப் பயன்படுத்தி பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ சேர்ந்து விட்டாராம் ஷெரீன். கடந்த வாரம்தான் பரீட்சை தொடங்கியதாம். அடுத்த வாரம் முடியப் போகிறதாம்.

பரீட்சைக்காக தனது அம்மா யசோதாவுடன் பெங்களூருக்குப் பறந்துள்ளார் ஷெரீன். பரீட்சையில் நல்ல மார்க் எடுப்பதே இப்போதைய லட்சியம் என்று கூறும் ஷெரீன், பரீட்சையை முடித்து விட்டுத் திரும்பியதும், மளமளவென நிறையப் படங்களில் நடிக்கப் போகிறாராம் ஷெரீன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil