»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துள்ளுவதோ இளமை படத்துக்குப் பிறகு ஷெரீன் அதிகம் பேசப்பட்டாடும் அவரது படங்கள் பேசப்படவில்லை.அடுத்து வந்த ஜெயா உள்ளிட்ட எல்லா படங்களும் தோற்றன.

இதனால் ஷெரீன் கவலையில் இருந்தார். இப்போது

சத்யராஜின் மகன் சிபியுடன் இணைந்து நடித்த ஸ்டூடண்ட் நம்பர் 1 வெற்றி பெற்றுவிட்டதால் மீண்டும் துள்ளலில்இருக்கிறார் ஷெரீன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிபிக்கும், அவரை விட அதிகமாக ஷெரீனுக்கும் புதுப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

துள்ளுவதோ இளமைக்குப் பிறகு இப்படித்தான் ஷெரீனுக்கு ஏராளமான படங்கள் புக் ஆயின. ஆனால், அதில் பலபடங்கள் வரவேயில்லை. சும்மா ஷெரீனைக் கூப்பிட்டு அவ்வப்போது ஜொள்ளு விட்டதோடு படத்தையேஎடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள் பல தயாரிப்பாளர்கள்.

படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கும் வசூல் திருப்தி தரவில்லை. ஸ்டூடண்ட் நம்பர் 1 மீண்டும் ஷெரீனை தூக்கிநிறுத்தியுள்ளது. இந்தமுறை தன்னை ஷெரீன் நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வாரா என்பதைபொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil