»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுவரை யாரும் செய்திராத அளவுக்குப் படுபயங்கரமாக கவர்ச்சி காட்டி நடிக்கப் போகிறாராம் ஷெரீன்.

"துள்ளுவதோ இளமை"க்குப் பிறகு வந்த பல பட வாய்ப்புகளும் கவர்ச்சியை மையமாக வைத்தே இருந்ததால் சில படங்களைஷெரீன் நிராகரித்து விட்டார்.

மேலும் குடும்பப் பாங்கான ரோல்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால் இதுபோன்ற அடக்க, ஒடுக்கரோல்கள் ஷெரீனுக்கு ஒத்து வராது என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலும். ஒரு படமும் வரவில்லை.

கடைசியாக வந்த "ஸ்டூடண்ட் நம்பர் 1" படத்திலும் கூட ஷெரீன் கவர்ச்சி காட்டியதால்தான் படம் சுமாராகவாவது ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு முடிவுக்கு வந்துள்ளார் ஷெரீன். இனிமேல் கவர்ச்சியாக மட்டுமே நடிப்பது என்றும்,முடிந்தால் இதுவரை யாரும் காட்டத் துணியாத அளவுக்கு கவர்ச்சி காட்டுவதில் கரை கடப்பது என்றும் முக்கியமான முடிவைஎடுத்துள்ளார்.

ஷெரீனின் இந்த அதிரடி முடிவால் சில குலுக்கல் நடிகைகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாம். ஷெரீனை எப்படி பிளாக் பண்ணுவது என்றுஅவர்கள் "குலுங்கிக் குலுங்கி" ஆலோசனை செய்து வருகிறார்களாம்.

திரிசங்கு சொர்க்கத்தில் திரிஷா

திரிஷா வெறுத்துப் போயுள்ளார். என்ன ரோல் செய்தால் உருப்படலாம் என்று பலரிடமும் பல ஐடியாக்களைக் கேட்டு வருகிறார்.

முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே அடுத்தடுத்து வந்த படங்கள் அவர் குறித்த எதிர்பார்ப்பைப் பெரிதுபடுத்தின.

ஆனால் சொல்லி வைத்ததுபோல் அனைத்துப் படங்களும் வரிசையாக ஊத்திக் கொள்ளவே மிகவும் நொந்து போய் விட்டார் திரிஷா."கவர்ச்சியாக நடித்தும் படம் ஓடவில்லையே, ஏன்?" என்று தனக்குத் தானே கேட்டு வருகிறார்.

"குடும்பப் பாங்கான ரோலில் நடிக்கும் லட்சணம் தனக்கு இல்லை. எனவே அது போன்ற ரோல்களிலும் நடிக்க முடியாது. கவர்ச்சிகாட்டினாலும் படம் ஊத்திக் கொள்கிறது. என்ன செய்வது?" என்று கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார் திரிஷா.

இருந்தாலும் பலரிடமும் சென்று அவர் ஆலோசனை கேட்டு வருகிறார். என்ன மாதிரியாக நடித்தால் உருப்படலாம் என்றுஅவர்களிடம் திரிஷா கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அடப் பாவமே, திரிஷாவின் நிலை திரிசங்கு சொர்க்கம்தானோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil