»   »  கணவருடன் காதல்-ஷில்பா மீது மனைவி புகார்!

கணவருடன் காதல்-ஷில்பா மீது மனைவி புகார்!

Subscribe to Oneindia Tamil

பிக்பிரதர் சர்ச்சை, ரிச்சர்ட் கெரேவின் கட்டிப்புடி முத்தம் ஆகிய சர்ச்சைகளைத் தொடர்ந்து இன்னொரு சிக்கலில் மாட்டியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

இந்தியத் திரையுலகில் பெரிதும் ஒதுக்கப்பட்டிருந்த ஷில்பா ஷெட்டி, லண்டன் சேனல்4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஓவர் நைட்டில் புகழின் உச்சிக்குப் போய் விட்டார்.

அந்த நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது இங்கிலாந்தும் ஷில்பாவுக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள். அதன் பின்னர் கிட்டத்தட்ட மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற லெவலுக்கு மாறி விட்டார் ஷில்பா.

சமீபத்தில் டெல்லியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷில்பாவை, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே கட்டிப் பிடித்து முத்தமிட்ட செயல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கெரேவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஷில்பா அமைதியாக முத்தங்களைப் பெற்றுக் கொண்டது தவறு என்று பலரும் குற்றம் சாட்டினர்.

ஆனால் இந்த புகார்களை ஓரங்கட்டிய ஷில்பா, இதில் என்ன தவறு இருக்கிறது, முத்தமிடப் போவதாக முன்கூட்டியே என்னிடம் சொல்லி விட்டார் கெரே என்று அதிரடியாக பதிலளித்தார். இந்த நிலையில் ஷில்பா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவருக்கும், ஷில்பாவுக்கும் இடையே காதல் உருவாகி, நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. இந்தப் புகாரை தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல, குந்த்ராவின் மாஜி மனைவியான கவிதா குந்த்ராதான்.

ராஜ் குந்த்ரா ஒரு சினிமா தயாரிப்பாளர் இந்தியில் இரு படங்களைத் தயாரித்துள்ளார். ஓம்பூரி நடித்த கிங் ஆப் பாலிவுட் என்ற படத்தை இங்கிலாந்தில் விநியோகித்துள்ளார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தையும் உள்ளது.

குழந்தை பிறந்த பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவிதாவும், ராஜ் குந்த்ராவும் பிரிந்து விட்டனர். தற்போது விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜ்.

தானும், தனது கணவரும் பிரிய ஷில்பா ஷெட்டிதான் காரணம் என தற்போது கவிதா புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது கணவருக்கு பாலிவுட் நடிகைகள் மீது அதிக மோகம் உண்டு. கடந்த ஆண்டு ஒரு நடிகையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பிறகு அவரைப் பிரிந்து விட்டார்.

நாங்கள் நல்லபடியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் ஷில்பா ஷெட்டியுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதையடுத்து எனது தாய் வீடான மும்பைக்கு வந்து விட்டேன். ஒரு நாள் எனக்கு அவர் எஸ்.எம்.எஸ். மூலம் நமது திருமண பந்தம் முறிந்து விட்டது. இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது என்று செய்தி அனுப்பினார். இதைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன்.

ஷில்பாவுடன் நீங்கள் வைத்துள்ள தொடர்பை நான் எதிர்க்கவில்லை. நமது குழந்தைக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேன். உங்களது கள்ளக் காதலை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நாம் பிரிய வேண்டாம். குழந்தையை மனதில் கொண்டு அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றேன்.

முதலில் இதற்கு அவர் ஒத்துக் கொண்டார். ஆனால் திடீரென மனம் மாறி இப்போது விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஷில்பாதான் இதற்குக் காரணம். அவர் மீது கொண்ட மோகத்தால்தான் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜ்.

அவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அறிகிறேன். அதற்கு நான் இடையூறாக இருக்கக் கூடாது என்பதால்தான் விவாகரத்து கேட்கிறார் ராஜ்.

இதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னால்தான் எனது கணவர் விரும்பிய மனைவியாக இருக்க முடியவில்லை. ஷில்பாவாவது அவருக்குப் பிடித்தமான மனைவியாக இருந்து விட்டுப் போகட்டும் என்று கூறியுள்ளார் கவிதா.

கவிதாவின் இந்தப் பேட்டி பாலிவுட்டிலும், இங்கிலாந்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கவிதாவின் கூற்றை ஷில்பாவும், ராஜ் குந்த்ராவும் மறுத்துள்ளனர். ராஜ் குந்த்ரா இதுகுறித்துக் கூறுகையில், நானும், ஷில்பாவும் நண்பர்கள் மட்டுமே. எங்களுக்குள் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. ஷில்பா பெயரில் வெளியாகியுள்ள சென்ட் விற்பனையை நான் உரிமம் எடுத்து நடத்தி வருகிறேன். அந்த அளவில் மட்டுமே எங்களுக்குள் தொடர்பு உள்ளது.

எனது தொழில் சம்பந்தமாக நான் பல பெண்களுடன் பழக நேரிடுகிறது. அவர்களுடன் எல்லாம் என்னை சேர்த்து வைத்துப் பேசி வருகிறார் கவிதா. அவர் பாதுகாப்பற்ற மன நிலையில் உள்ளார். அதனால்தான் நான் விவாகரத்து செய்ய விரும்புகிறேன். இதற்கும், ஷில்பாவுக்கும் எந்த்த தொடர்பும் இல்லை என்றார்.

ஷில்பா தரப்பிலும் கல்யாணப் பேச்சை மறுத்துள்ளனர். ராஜும், ஷில்பாவும் நண்பர்கள்தான் என்று ஷில்பா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஷில்பாவிடம் மன்னிப்பு கேட்கும் குந்த்ரா

இதற்கிடையே, தனது மனைவி கவிதாவின் புகாருக்காக ஷில்பாவிடம் மன்னிப்பு கேட்பதாக ராஜ் குந்த்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நானும் எனது மனைவியும் 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்து விட்டோம். நான்கு மாதங்களுக்கு முன்பு விவாகரத்துக்கு விண்ணப்பித்ேதன். இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட ஒப்புக் கொண்டோம்.

விவாகரத்துக்கான காரணங்கள் தனிப்பட்டவை. அவற்றை விரிவாக விவாதிக்க முடியாது. அப்படிச் ெசய்தால், எனது மனைவியைப் ேபால நானும் தரக் குறைவான செய்திகளைச் ெசால்ல நேரிட்டு விடும்.

இந்த நிமிடத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 3 மாதங்களுக்கு முன்புதான் அவரது மேலாளர் பர்ஹத் ஹூசேன் மூலம் எனக்கு ஷில்பா அறிமுகமானார். ஷில்பாவின் பெயரில் உருவாக்கப்பட்ட ெசன்ட் வெளியீட்டின்போதுதான் ஷில்பாவுக்கு நான் அறிமுகமானேன்.

அந்த அறிமுகம் தொழில் ரீதியான அறிமுகம்தான். எங்களது திருமண பந்தம் முறிந்து ேபானதற்கு ஷில்பாதான் காரணம் என எனது மனைவி புகார் கூறியுள்ளார். அதில் உண்மையில்லை. ஷில்பாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஷில்பாவுடன் நான் கொண்டுள்ள உறவு முற்றிலும் தொழில் ரீதியானது. நாங்கள் இருவரும் கடந்த சில மாதங்களில் நல்ல நண்பர்களாகியுள்ளோம்.

நான் கவிதாவுக்கு கடந்த ஜனவரி மாதம் வீடு வாங்கிக் ெகாடுத்ேதன். அந்த வீட்டுக்குச் சென்றுதான் எனது குழந்தையைப் பார்த்து வருகிறேன். குழந்தையைப் பார்க்கக் கூட நான் வரக் கூடாது என விரும்பினார் கவிதா. இதற்காக கோர்ட்டில் வழக்கும் போட்டார். ஆனால் கடந்த மே 2ம் தேதி நான் குழந்தையைப் பார்க்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கவிதாவின் அறிக்கை மிகுந்த வேதனையைத் தருகிறது. ஷில்பாவுக்கும், எனக்கும் உள்ள நல்ல நட்பைக் களங்கப்படுத்துவதாக உள்ளது.

என்னால் ஷில்பா மீது கவிதா அவதூறான புகாரைக் கூறியுள்ளார். இதற்காக நான் ஷில்பாவிடம் இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.மேலும் எனது மனைவியின் அவதூறான புகார்களை பத்திரிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் ெகாள்கிறேன் என்று கூறியுள்ளார் குந்த்ரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil