»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரேவதி இயக்கும் ஒரு இந்திப் படத்தில் ஷில்பா ஷெட்டியுடன் மாதவன் நடிக்கிறார்.

சிறிது காலத்துக்கு முன்பு வரை ரூ. 1 கோடி கொடுத்தால் தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடித்து வந்தார் மாதவன். இதனால் வீட்டிலேயேஅடை காத்து வந்தார். ஆனால், இப்போது அவரது நிலையில் பெரும் மாற்றம். ரேட்டை இறக்கத் தயார் என்று அறிவித்துவிட்டார்.

மாதவனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாரம் தவறாமல் ஏதாவது ஒரு தயாரிப்பாளர் வந்து மாதவனிடம் அட்வான்ஸ் வெட்டஆரம்பித்துவிட்டனர். இதனால் கையில் ஏகப்பட்ட படங்கள். மாதவன் அளவுக்கு கோலிவுட்டில் வேறு எந்த நடிகருக்கும் கைவசம் படங்கள்இல்லை என்று சொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை.

பாசில் இயக்கத்தில் ஒரு படம், சுசிகணேசன் இயக்கத்தில் கருப்பன், நாசரின் தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் ப்ரிய சகி, சீமான்இயக்கத்தில் தம்பி மற்றும் வெட்டிப்பயல் ஆகிய படங்களில் மாதவன் நடிக்கிறார்.

அஜீத்துடன் காட்பாதர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், தம்பி படத்தில் மாதவனுடன் நடிக்க ஆஷின் மறுத்துவிட்டார் என்பதை நாம்தெரிவித்து இருந்தோம். இப்போது அந்த வேடத்தில் நிகிதா நடிக்கிறார்.

கருப்பன் படத்திற்கு சூடாக கதை விவாதம் நடந்து வருகிறது. இந் நிலையில், மாதவனுக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்புகிடைத்துள்ளது. படத்தை இயக்கப் போவது கோலிவுட்டைச் சேர்ந்தவர்.


கோலிவுட் என்றதும் மணிரத்னமா, அல்லது ஷங்கரா என்று யோசிக்காதீர்கள். இது வேற. கமல், ரஜினி, விஜயகாந்த் என்று மூத்த நடிகர்கள்பலருடன் ஜோடி சேர்ந்து, சிறந்த நடிகை என்று பெயர் வாங்கி, பின்பு நடிப்பிலிருந்து ரிடையர்ட்மெண்ட வாங்கி விட்ட ரேவதிதான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே மித்ர மை பிரண்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்சல்மான்கான், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் வணிக ரீதியாக வெற்றியடையாவிட்டாலும், ரேவதிக்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. இப்போது ரேவதி அடுத்து ஒருபடத்தை இயக்க தயாராகி விட்டார்.

இந்தப் படத்திலும் ஷில்பா ஷெட்டிதான் ஹீரோயினாக நடிக்கிறார். கதாநாயகனாக யாரைப் போடலாம் என்று யோசித்தபோது ரேவதியின்நினைவுக்கு வந்தவர் மாதவன்தான். கால்ஷீட் கேட்டபோது அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

மாதவன் ஏற்கனவே ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால்தான் மணிரத்னம் கூடஆய்தஎழுத்தின் இந்திப் பதிப்பில் மாதவனுக்குப் பதிலாக அபிஷேக்பச்சனை நடிக்க வைத்தார்.

இந் நிலையில் ரேவதியின் இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் ஒரு முத்திரை பதிக்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறார் மாதவன்.

வரிசையாக இத்தனைப் படங்களை ஒப்புக் கொண்டு, அவற்றிற்கு பிரச்சினையில்லாமல் எப்படி கால்ஷீட் வழங்குகிறார் என்பதைமாதவனிடம் தனுஷ் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil