»   »  50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி

50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி

Subscribe to Oneindia Tamil

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

தென்னிந்திய திரையலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. ஏவி.எம். நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான படம் தயாரிக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மெகா பட்ஜெட் படம் சிவாஜி.

இப்படிப்பட்ட படம் இப்போது வெறும் 50 ரூபாய்க்கு தெருவில் வைத்து விற்கப்படுகிறது. சென்னையின் புறநகரான நங்கநல்லூரில், ஒரு டிவிடி கடைக்கு எதேச்சையாக போக நேர்ந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு டிவிடியைக் காட்டினார்.

என்ன படம், என்ன விவரம் என்று எதுவும் அந்த டிவிடியில் இல்லை. ஆனால் கடைக்காரர், நமது காதை அருகில் இழுத்து கிசுகிசுத்தார். சிவாஜி பட டிவிடி சார் இது. படத்தின் 40 நிமிடக் காட்சிகள் இதில் உள்ளது. 50 ரூபாய்தான், வேணுமா என்று அவர் கூறக் கூற நமக்கு தலை சுற்றிப் போனது.

நிஜமாவா என்று நாம் ஆச்சரியம் காட்டியபோது, மெய்யாலும்தான் சார், குவாலிட்டியைப் பற்றிக் கவலைப்படாதீங்க, டிஜிட்டல் பிரிண்ட் இது. படு சூப்பராக இருக்கும், தியேட்டரில் பார்ப்பது போலவே எஃபக்டிவாக இருக்கும் என்று உத்தரவாதமும் கொடுத்தார்.

ஷாக்கிலிருந்து மீளாத நிலையில், நாம் உடனே படத்தின் பி.ஆர்.ஓ. பெரு துளசிபழனிவேலைப் போனில் பிடித்து விசாரித்தோம். மேட்டர் தெரியுமா என்று அவரிடம் கேட்டபோது, அப்படியா சார், எனக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுங்க சார் என்றார் படு கூலாக!.

தொடர்ந்து அவரே, தினசரி சிவாஜி குறித்து ஒரு செய்தி வருகிறது. ஒவ்வொரு செய்திக்கும், வதந்திக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்களுடைய வேலைதான் கெட்டுப் போகும். ஏவி.எம். சரவணன் சார் சொல்வதுதான் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல். இதற்கு அவரே பதில் சொல்லட்டும் என்றார்.

முதலில் பட ஸ்டில்கள் லீக் ஆனது, பின்னர் படமே லீக் ஆனதாக செய்தி வந்தது. சமீபத்தில் 3 பாடல்களை இணையதளத்தில் உலவ விட்டனர். இப்போது 40 நிமிட படக் காட்சிகளை வெளியில் விட்டுள்ளனர். அடப் பாவிகளா..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil