»   »  ஏப். 2ம் தேதியே சிவாஜி பாட்டு!

ஏப். 2ம் தேதியே சிவாஜி பாட்டு!

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் 4ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த சிவாஜி படப் பாடல் கேசட் மற்றும் சிடிக்கள் 2 நாள் முன்னதாக ஏப்ரல் 2ம் தேதியே ரிலீஸ் ஆகிறது.

சந்திரமுகி என்ற விருந்தே இன்னும் செரிக்காத நிலையில், சிவாஜி என்ற மாபெரும் விருந்துக்கு ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். பூஜை போட்ட நாள் முதலே, சிவாஜி குறித்த பல செய்திகள் கசியத் தொடங்கின.

லேட்டஸ்ட்டாக படத்தின் 3 பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது. முக்கால் மணி நேர படக் காட்சியும் கூட ரிலீஸாகி விட்டது. அனேகமாக அதிகாரப்பூர்வமாக படம் வருவற்கு முன்பே திருட்டு டிவிடியில் படம் வந்தாலும் வரலாம்.

சிவாஜி படப் பாடல்கள் ஏப்ரல் 4ம் ேததி நடைபெறும் விழாவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை 2 நாட்கள் முன் கூட்டியே வெளியிட தீர்மானித்துள்ளனர் (மற்ற பாடல்களும் திருட்டுத்தனமாக வந்து விடுேமா என்ற அச்சமா?)

இதுதொடர்பாக ஏவி.எம். நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏப்ரல் 2ம் தேதி முதல் சிவாஜி படத்தின் பாடல் கேசட் மற்றும் சிடிக்கள் விற்பனைக்கு வருகிறது.

ஒரு ஆடியோ சிடியின் விலை ரூ. 100 ஆகும். கேசட்டின் விலை 45 ரூபாயாகும்.

சிடிக்கள் மற்றும் கேசட்டுகளுடன் 3 ரஜினி ஸ்டிக்கர்களும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரிஜினல் கேசட், சிடிக்களை வாங்கி, கூடவே ரஜினியின் ஸ்டிக்கர்களையும் வாங்கி எங்காவது ஒட்டி ரசித்தபடி, பாடலைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil