»   »  மொத்த சிவாஜி பாட்டும் லீக்!

மொத்த சிவாஜி பாட்டும் லீக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் அத்தனை பாடல்களும் இன்டர்நெட்டில் லீக் ஆகி விட்டது. நாளை சிவாஜி பட ஆடியோ அதிகாரப் பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில் அத்தனை பாடல்களும் எம்.பி. 3 வடிவில் வெளியாகியுள்ளது சிவாஜி பட யூனிட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்க, ஏவி.எம். தயாரிக்க பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. படம் ஆரம்பித்த நாள் முதலே ஏதாவது ஒரு பரபரப்பு செய்தி வெளியாகிய வண்ணம் இருந்தது.

முதலில் படத்தின் ஸ்டில்கள் வெளியாகின. அடுத்து சமீபத்தில் 3 பாட்டுக்களைச் சுட்டு இன்டர்நெட்டில் உலவ விட்டனர். இப்போது படத்தில் இடம் பெற்றுள்ள 9 பாடல்களுமே இன்டர்நெட்டில் ரிலீஸ் ஆகி விட்டது.

3 பாடல்கள் வெளியானது எப்படி என்ற குழப்பமே தெளிவாகாத நிலையில், படத்தின் அத்தனை பாடல்களும் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது ஏவி.எம். தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நாளை படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில், படத்தின் பாடல்களை இன்டர்நெட்டில் லீக் பண்ணி விட்டதால் பெரும் குழப்பம் பிளஸ் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது சிவாஜி யூனிட்.

சரி குழப்பம் ஒரு பக்கம் இருக்கட்டும். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

மொத்தம் 9 பாட்டுக்கள் சிவாஜியில். பாடல்களின் பட்டியல்

1.அதிரடி (ஏ.ஆர்.ரஹ்மான், சயனோரா)
2. வாஜி வாஜி சிவாஜி ... (ஹரிஹரன், மது ஸ்ரீ)
3. சஹாரா பூக்கள் .. (விஜய் ஜேசுதாஸ், கோமதீஸ்வரி).
4. காவிரி ஆறும் கைக்குத்து அரிசியும் ...(எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரைஹானா, பென்னி)
5. சஹானா சாரல் தூவுதோ ... (உதித்நாராயண், ரஹ்மான், சின்மயி)
6. ஸ்டைல் ஸ்டைல் ...
7. ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட் ... (சுரேஷ் பீட்டர்ஸ், பிளேஸ், தன்வி)
8. தி பாஸ் (பிளேஸ் நரேஷ் ஐயர், ரக்வீப் ஆலம்)
9. சஹானா சாரல் தூவுதோ ... (ரஹ்மான், சின்மயி)


அத்தனை பாட்டுக்களும் படு அமர்க்களமாக உள்ளன. பாடல்கள் லீக் ஆன விவரம் தீயாய் பரவிவிடவே, உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற வகையில், சிவாஜி படப் பாடல் ரிலீஸ் ஆகி விட்டது.

அடுத்த ரிலீஸ் - முழு நீள சிவாஜி படம்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil