»   »  சிவாஜிக்காக ரஜினி சிறப்பு பூஜை

சிவாஜிக்காக ரஜினி சிறப்பு பூஜை

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படம் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதற்காக ரஜினி தனது போயஸ் கார்டனில் சிறப்பு பூஜையும், யாகமும் நடத்தியுள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் தனது வீட்டில் சிவாஜி பட யூனிட்டருக்கு விருந்து கொடுத்தார். இதில் எதிர்பாராத விதமாக படத்தின் ஒலிப்பதிவாளர் சச்சிதானந்தம் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இது சிவாஜி பட யூனிட்டை சேர்ந்த அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல தான் ரஜினியின் பாபா ரீலிஸ் ஆவதற்கு முன்பு ரஜினியின் குருவான சச்சிதானந்த மஹாராஜ் பாபா அவர்கள் இதய கோளரால் உயிரிழந்தார். இதனால் ரஜினி அப்போது மிகுந்த மன வருத்தம் அடைந்தார்.

படம் வெளிவந்த பிறகு ரஜினி ஏராளமான சிக்கலுக்கு ஆளானர். படமும் எதிர்பார்த்த அளவிற்கு படமும் ஓடவில்லை.

பாபா ரீலிஸின் போது ரஜினியின் குரு இறந்தது போல, இப்போது சிவாஜி ரீலிசாக காத்திருக்கும் நேரத்தில் ஒலிப்பதிவாளர் சச்சிதானந்தம் உயிரிழந்தது ரஜினிக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் தனது போயஸ் கார்டன் வீட்டில் சிவாஜி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு பூஜையும், யாகமும் ரஜினி நடத்தியுள்ளார். இதில் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டார்.

Please Wait while comments are loading...