»   »  இதுதாம்பா சிவாஜி கதை!

இதுதாம்பா சிவாஜி கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி கதை என்ன என்று பலரும் பலவிதமாக எழுதி விட்டனர். ஆனால் சிவாஜியில், இந்தியப் பொருளாதாரத்தை எப்படி அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு சமமாக உயர்த்துவது என்பது பற்றி தனது பாணியிலும், ரஜினி பாணியிலும் சொல்லியிருப்பதாக கூறியுள்ளார் ஷங்கர்.

ரஜினி படம் என்றாலே அதன் கதை என்ன, தலைவர் சொல்லும் மெசேஜ் என்ன என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை. அதிலும் ஷங்கர் படம் என்றாலே கண்டிப்பாக மெசேஜ் வைக்காமல் விட மாட்டார்.

இப்போது இருவரும் இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்தில் எதைத் தொட்டிருக்கிறார்கள் இருவரும் என்ற எதிர்பார்ப்பு ஏராளமாகவே உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தைத்தான் இப்படத்தில் கதையாக வைத்திருக்கிறாராம் ஷங்கர்.

இதுகுறித்து ஷங்கர் கூறுகையில், சிவாஜியில் இந்தியப் பொருளாதாரத்தை கதையாக கொண்டுள்ளோம். அதேசமயம் அறிவுரை கூறும் படமாக இது இருக்காது.

ஆனால் நமது பொருளாதாரத்தை எப்படி அமெரிக்க பொருளாதாரத்துக்கு இணையாக உயர்த்துவது, அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எனது பாணியிலும், ரஜினி பாணியிலும் சொல்லியுள்ளோம்.

படத்தில் அத்தனை வணிக அம்சங்களும் இருக்கிறது. குறிப்பாக ரஜினி சாரின் ரசிகர்களை இது நிச்சயம் ஏமாற்றாது. அவர்களை வெகுவாக கவரும் வகையிலான அம்சங்களை ஏராளமாகவே வைத்திருக்கிறோம் என்றார் ஷங்கர்.

படத்தின் ரிலீஸ் தேதி (மே 17) நெருங்கி வருவதால் திரையுலகிலும், ரஜினி ரசிகர்களிடையேயும் ஆவல் அடித்து எகிறிக் கொண்டிருக்கிறது.

ஜிவாஜி வேகமா வாஜி

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil