»   »  சிவாஜிக்கு 900!

சிவாஜிக்கு 900!

Subscribe to Oneindia Tamil

இந்திய திரை வரலாற்றில் முதல் முறையாக என்று கூறும் அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்துக்கு 900 பிரிண்டுகளைப் போட்டு அசத்தியுள்ளனராம்.

விடிஞ்சா கல்யாணம் என்று கூறும் அளவுக்கு தோ, சிவாஜி படம் வரப் போகிறது. அப்படி இருந்தும் சிவாஜி குறித்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது ஒரு சேதி வந்து கொண்டுதான் உள்ளது.

2 வருடங்களாக, ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி ரூ. 50 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட நிலையில் சிவாஜி திரையிடுவற்குத் தயாராக உள்ளது.

படத்தின் விநியோக உரிமை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். தமிழகத்தில் படத்தை திரையிடுவதற்கான உரிமையை ஜெமினி லேபுக்குக் கொடுத்துள்ளனர். ரூ. 70 கோடியைக் கொடுத்து இந்த உரிமையை வாங்கியுள்ளதாம் ஜெமினி லேப்.

கேரள உரிமை ரூ. 2.8 கோடிக்கும், ஆந்திர உரிமை ரூ 8.5 கோடிக்கும், கர்நாடக விற்பனை குறித்து ஏவி.எம். நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ரூ. 15 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு உரிமைதான் பெரும் விலைக்குப் போயுள்ளதாம். வழக்கமாக ஏவி.எம். படங்களை வாங்கும் அய்ங்கரன் இன்டர்நேஷனல் தவிர மேலும் ஐந்து பேரும் படத்தை வாங்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 900 பிரிண்டுகளைப் போடவுள்ளனராம். வெளிநாட்டு பிரிண்டுகளையும் சேர்த்தால் மொத்தம் 1200 பிரிண்டுகளைத் தாண்டி விடுமாம்.

சூப்ப்ப்பரப்பு!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil