»   »  மே 31க்கு தள்ளிப் போன சிவாஜி

மே 31க்கு தள்ளிப் போன சிவாஜி

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்க மே 31ம் தேதி சிவாஜி ரிலீஸ் ஆவதாக ஏவி.எம். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த், ஷ்ரியா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏவி.எம். தயாரிப்பில், மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள சிவாஜி ரிலீஸ் குறித்து பலவித தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தன.

முதலில் ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது கேன்சல் ஆகி மே மாதத்தில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. மே 26ம் தேதி படம் ரிலீஸாகும் என கடைசியாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை ஏவி.எம். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அதன்படி மே 31ம் தேதி உலகெங்கும் சிவாஜி ரிலீஸ் ஆகிறார்.

படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், படம் தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாகவும், மே 31ம் தேதி படம் ரிலீஸாகும் எனவும் ஏவி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜியில் ரஜினி இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷ்ரியா நடித்துள்ளார். நயனதாரா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ரகுவரன், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் மட்டும் 900 பிரிண்டுகளுடன் சிவாஜி திரைக்கு வருகிறது.

ரஜினி ரசிகர்களின் காத்திருப்புக்கு ஒரு வழியாக முடிவு வந்துள்ளது. தலைவரின் படத்தை கண்டு தரிசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு மே 31ம் தேதி திவ்ய தரிசனம் தர வருகிறார் சிவாஜி.

Please Wait while comments are loading...