»   »  சிவாஜி.. ஷ்ரியா ஆபாசம் கட்

சிவாஜி.. ஷ்ரியா ஆபாசம் கட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

யூ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள சிவாஜி படத்தில் மூன்று காட்சிகளுக்கு மட்டும் வெட்டு விழுந்துள்ளது. ஷ்ரியா தொப்புள் காட்டி நடித்திருந்த காட்சி ஆபாசமாக இருப்பதாக தணிக்கை வாரியம் கூறியதால் அந்தக் காட்சி வெட்டப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள சிவாஜி ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. சமீபத்தில் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் பெரிய அளவில் வன்முறை, ஆபாசம் இல்லாததால் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 15ம் தேதி படம் தணிக்கை செய்யப்பட்டது. படத்தில் எந்த வெட்டும் விழவில்லை என தயாரிப்பாளர்கள் தரப்பில் முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மூன்று காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரு பாடல் காட்சியில் ரஜினி ஷ்ரியாவின் பளபள தொப்புளைத் தடவியபடி வருகிறார். இந்தக் காட்சிக்கு தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அப்போது ஷங்கர் அங்கு இல்லை. அவர் கேன்ஸ் திரை விழாவுக்குப் போயிருந்தார்.

இதையடுத்து அவரது உதவியாளர்கள் போன் மூலம் ஷங்கரைப் பிடித்து தணிக்கை வாரிய உறுப்பினர்களின் ஆட்சேபனையைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போன் மூலமாகவே தணிக்கை வாரிய அதிகாரிகளிடம் விவாதித்தார் ஷங்கர்.

படத்திற்கு அந்தக் காட்சி முக்கியமானது. அதை எடுத்து விட்டால் படத்தின் கோர்வை கெடும் என்று கூறியுள்ளார். ஆனால், காட்சியை கட் செய்தே ஆக வேண்டும் என தணிக்கை வாரியம் திட்டவட்டமாக கூறியதால், வேறு வழியின்றி அதற்கு உடன்பட்டார் ஷங்கர்.

ஆனால் இதே காட்சியை வேறு கோணத்தில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாராம் ஷங்கர். இதையடுத்து புதிய காட்சியை அந்த இடத்தில் கவனமாக சேர்க்குமாறு தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஷங்கர்.

இதேபோல விவேக் பேசிய சில காட்சிகளில் ஆபாசம் தொணிப்பதாக கருதியுள்ளனர் தணிக்கை வாரிய உறுப்பினர்கள். இரு காட்சிகளில் விவேக் பேசும்போது அந்த இடத்தில் வசனம் இடம் பெறாமல் வெறும் வாயசைப்பு மட்டும் வருமாறு மாற்றம் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த மூன்று வெட்டுக்களுடன் படத்திற்கு யூ சான்றிழ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கேன்ஸில் உள்ள ஷங்கரை தொலைபேசியில் பிடித்து கருத்து கேட்டபோது, தொப்புள் காட்சியில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. ரசிக்கத்தக்க வகையில்தான் அதை படமாக்கியிருந்தேன்.

அதேபோல விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதை ஏற்கனவே செய்து விட்டோம். சிவாஜி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் மிகச் சிறந்த படமாக வந்துள்ளது என்றார் ஷங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil