»   »  சிவாஜி.. டிரைலரும் அன்-அபீஷியலாக ரிலீஸ்

சிவாஜி.. டிரைலரும் அன்-அபீஷியலாக ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் ஸ்டில்கள், பாடல்கள், படக் காட்சிகள முன்கூட்டியே அவிழ்த்து விட்டது போல இப்போது படத்தின் டிரைலரும் அன் அபீஷியலாக லீக் ஆகி விட்டது.

சிவாஜி படம் ஜூன் 15ம் தேதி வருகிறது. படத்தின் ஆடியோ கேசட் ஏற்கனவே வெளியாகி விட்டது. படத்தின் டிரைலரும் ரெடியாகி விட்டது. நாளை ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுவிட்டது முன்னணி ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் இணையத் தளம்.

நேற்று இரவு தனது இணையதளத்தில் படத்தின் டிரைலரை அந்த சேனல் வெளியிட்டது.

சுமார் 30 விநாடிகள் ஓடும் அந்த டிரைலரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும், ஸ்டைல் லுக்கும், பாடல் காட்சியும், ஸ்ரேயாவின் அழுகைக் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

3 விதமான கெட்டப்களில் ரஜினி அதில் வருகிறார்.

யாராலும் இமிடேட் செய்ய முடியாத தனக்கே உரிய ஸ்டைல் நடையுடன், படு யூத்புல்லாக தோன்றுகிறார் ரஜினி. சண்டைக் காட்சிகளில் இதுவரை காணாத இளமை காந்த்தாக மாறிப் போயுள்ளார் ரஜினி.

இந்த டிரைலரில் 3 பாடல்களின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அத்தனையும் ஷங்கர் பாணி பாடல்கள்.

டிரைலர் லீக் ஆனது குறித்து ஏவி.எம். செய்தித் தொடர்பாளர் பெரு. துளசிபழனிவேலிடம் கேட்டபோது,

இது அதிகாரப்பூர்வமான டிரைலர் கிடையாது. 31ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக டிரைலரை ரிலீஸ் செய்கிறோம் என்றார்.

சிவாஜி படத்தைப் பொறுத்தவரை அன் அபீஷியலாக வெளியான எல்லாமே பின்னர் அபீஷியலாகவும் வெளியானது.

டிரைலர் விஷயத்திலும் அப்படித்தான் நடக்குமா என்பதை நாளைதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...