»   »  அமெரிக்காவில் சிவாஜி முதல் ஷோ

அமெரிக்காவில் சிவாஜி முதல் ஷோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் முதல் ஷோ அமெரிக்காவில் ஜூன் 14ம் தேதி திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏவி.எம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படைப்பான சிவாஜி ஜூன் 15ம் தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக ஜூன் 14ம் தேதி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் திரையிடப்படவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

பெலுவி, கிர்க்லாண்ட், ரெட்மாண்ட் ஆகிய பகுதிகளில் டிக்கெட் விற்பனை படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மயூரி வீடியோஸ் என்ற நிறுவனம் டிக்கெட் விற்பனையை மேற்கொண்டுள்ளது.

படத்தின் பிரமாண்டத்தைப் போலவே டிக்கெட்டுகளிலும் அட்டகாசம் கொடி கட்டிப் பறக்கிறதாம். கண்ணைக் கவரும் வகையில் டிக்கெட் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

சிவாஜி படம் ஒரு நாள் முன் கூட்டியே சியாட்டிலில் திரையிடப்படுவதால் அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆனால் கொலம்பஸ் பகுதியில் ஜூன் 17ம் தேதிதான் சிவாஜி திரையிடப்படுகிறதாம். இதனால் அப்பகுதி ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil