»   »  சிவாஜி புக்கிங் ஒபன்ரசிகர்கள் அலைமோதல்

சிவாஜி புக்கிங் ஒபன்ரசிகர்கள் அலைமோதல்

Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

ஜூன் 15ம் தேதி சிவாஜி ரிலீஸ் ஆகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. சென்னை நகரில் மட்டும் 15 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அதிகாலையிலேயே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை நகரில் சிவாஜி திரையிடப்படும் தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் காணப்பட்டது. காலையில் அடித்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுக்களை வாங்கினர்.

ஜூன் 15ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழவதும் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

ரஜினி ரசிகர்களின் கூட்டத்தால் தியேட்டர்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் வந்து ரசிகர்களை விலக்கி விட வேண்டியதாயிற்று.

சென்னை நகரில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் போடப்பட்டிருந்தன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் டிக்கெட் வாங்க அலைமோதியதைப் பார்க்க முடிந்தது.

சத்யம் தியேட்டர் வளாகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தியேட்டர் வளாகத்தைச் சுற்றிலும் ரசிகர்கள் நிற்கும் அளவு்க்கு கூட்டம் கடுமையாக இருந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil