»   »  சிவாஜி, ரஜினி, கருணாநிதி ..

சிவாஜி, ரஜினி, கருணாநிதி ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதி, தனது குடும்பத்தினருடன் சிவாஜி படத்தைப் பார்த்து ரசித்தார். அவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் உடன் இருந்தார்.

சிவாஜி படம் பல தரப்பிலும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இதற்கு ரஜினியும் விதி விலக்கல்ல. படம் வெளியாகும் முன்பே முழுசாக பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரஜினி, தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் சிவாஜியை ரசித்துப் பார்த்தார்.

இந்த நிலையில், இன்னொரு மகா பிரபலமும் நேற்று சிவாஜி படத்தை பார்த்து ரசித்தார். அவர் தமிழக முதல்வர் கருணாநிதி. முதல்வர் அலுவலகத்திலிருந்து ஏவி.எம். நிறுவன அலுவலகத்திற்கு போன் வந்தது.

முதல்வர் சிவாஜியைப் பார்க்க ஆசைப்படுவதாக அந்தத் தகவல் கூறியது. இதையடுத்து தேவையான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனே நேரடியாக செய்தார்.

ஏவி.எம்.ஏசி தியேட்டரில் முதல்வர் பார்த்து ரசிப்பதற்காக சிவாஜியைத் திரையிட ஏற்பாடு செய்தனர்.மேலும் ரஜினிக்கும் தகவல் போனது. அவரும் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா புடை சூழ அடித்துப் பிடித்துக் கொண்டு ஏவி.எம்.முக்கு வந்து சேர்ந்தார்.

முதல்வர் வருவதற்கு முன்பாகவே வந்து விட்டார் ரஜினி. மாலை 6.10 மணிக்கு முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாள், மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் புடை சூழ வந்தார்.

ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

சரியாக 6.30 மணிக்குப் படத்தைப் போட்டனர். இரவு 10 மணிக்கு படம் முடிந்தது. படு ரிலாக்ஸ்டாக காணப்பட்ட முதல்வர் படத்தை குழந்தைத்தனமான ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தார்.

அவ்வப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரஜினியுடனும், வி.எம்.சரவணனுடனும் ஜாலியாக பேசியபடி இருந்தார். படத்தைப் பார்த்து முடிந்த பின்னர் பிரமாண்டமாக வந்திருப்பதாக ரஜினியிடம் பாராட்டிக் கூறினார் முதல்வர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாகவும், பிரமிப்பாகவும் வந்திருப்பதாக கூறினார்.

ரஜினியின் நடிப்பையும் பாராட்டிய முதல்வர், ரொம்ப பிரமாண்டமானதாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடியதாக சிவாஜி அமைந்திருப்பதாக கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil