»   »  நெட்டில் சிவாஜி ரிலீஸ்!

நெட்டில் சிவாஜி ரிலீஸ்!

Subscribe to Oneindia Tamil

உலகம் முழுக்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தின் சிவாஜி படம் இரு இணையதளங்களில் வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி படம் வெளியாவதற்கு முன்பு அதன் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் பாடல்கள் லீக் ஆகின. பிறகு படக் காட்சிகளும் கூட கசிந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் சிவாஜி படம் ஒரு வழியாக வெளியாகியது.

இந்த நிலையில், சிவாஜி முழுப் படமும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இரு இணையதளங்களில் சிவாஜி படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஒரு இணையதளத்தில், 4.95 டாலர் கொடுத்தால் சிவாஜி படத்தைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்னொரு இணையதளமும் சிவாஜியை ரிலீஸ் செய்துள்ளது.

இந்த இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள படத்தின் தெளிவாக இல்லை. தரம் குறைவாக இருந்தாலும் கூட, படத்தை டவுண்லோடு செய்வதில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இணையதளங்களில் சிவாஜி சட்டவிரோதமாக வெளியிடப்பட்டிருப்பது குறித்து சிவாஜி படத்தின் சர்வதேச விநியோகஸ்தர்களில் ஒருவரான அய்ங்கரண் நிறுவனத்தின் கருணாமூர்த்தி கூறுகையில்,

இணையதளங்களில் சிவாஜியை திரையிட யாருக்கும் நாங்கள் உரிமை அளிக்கவில்லை.

தியேட்டரில் வைத்து சிறிய வீடியோ கேமராவில் படத்தைப் பதிவு செய்து அதை இண்டர்நெட்டில் ஒளிபரப்பியுள்ளனர். இது வெளிநாடுகளில் சாதாரணமாக நிகழ்வதுதான். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது தவறானது, தடுக்கப்பட வேண்டியது என்றார்.

இதற்கிடையே தொடர்ந்து சிவாஜி திரையிட்டுள்ள தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஜூலை 2வது வாரம் வரைக்கும் பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளனவாம். பெங்களூரில் 1000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படத்தைப் பார்க்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil