»   »  டெல்லியைக் கலக்கும் சிவாஜி

டெல்லியைக் கலக்கும் சிவாஜி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லியில் கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். இதுவரை டெல்லியில் எந்தப் படமும் இத்தனை தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லை என்பதால் டெல்லியிலும் சிவாஜி சாதனை படைத்து விட்டது.

சிவாஜி படம் உலகெங்கும் வசூல் மழையில் நனைந்து கொண்டுள்ளது. பல புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது. உலகம் பூராவும் அமர்க்களப்படுத்தி வரும் சிவாஜி, இப்போது தலைநகர் டெல்லியிலும் புதிய சாதனையை படைத்து விட்டது.

டெல்லியில், 2 மல்ட்டிபிளக்ஸ் வளாகத்திலும், கர்கோவனில் ஒரு தியேட்டரிலும்தான் முதலில் சிவாஜி திரையிடப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் கூட்டம் கட்டி ஏறியதால், அசந்து போய் இப்போது கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். தற்போது மொத்தம் 12 தியேட்டர்களில் சிவாஜி கலக்கலாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

இதுவரை தலைநகர் டெல்லியில் இத்தனை தியேட்டர்களில் எந்தப் படமும் திரையிடப்பட்டதில்லை என்பதால் சிவாஜி மூலம் தமிழ் சினிமா புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுகுறித்து பிவிஆர் சினிமா என்ற மல்ட்பிளக்ஸ் வளாகத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஷாலு சபர்வால் கூறுகையில், சிவாஜி படத்துக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துல்ளது. இதனால் கூடுதல் திரையரங்குகளில் படத்தை திரையிட்டுள்ளோம்.

படம் அருமையாக உள்ளது. நான் படத்தைப் பார்த்தேன். எனக்கு படம் மிகவும் பிடித்து விட்டது என்றார் சபர்வால்.

மொழிப் பாகுபாடு இல்லாமல் பல்வேறு மொழி பேசுவோரும் சிவாஜியைப் பார்க்க கூடுகிறார்களாம். இதுவரை எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லியின் ஆர்.கே.புரம், சத்தர்பூர் ஆகிய பகுதகளிலும் சிவாஜியின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதால் அந்தக் காட்சிகளைப் பார்க்கவும் டெல்லி ரசிகர்கள் ஆர்வமாக வருகின்றனர்.

டெல்லியில் கிட்டத்தட்ட 11 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அனேகமாக அனைவருமே சிவாஜியைப் பார்த்து முடித்திருப்பார்கள் என்று டெல்லி தமிழ் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil